• Apr 06 2025

பிரபல இயக்குநர் நெல்சனின் அடுத்த ஹீரோ இவர் தான்..!

Mathumitha / 15 hours ago

Advertisement

Listen News!

இன்றைய தமிழ் சினிமா மற்றும் இந்திய சினிமாவில் முக்கிய இயக்குநராக பெயர் வாங்கியவர் நெல்சன் திலீப்குமார். அவரது இயக்கத்தில் வெளியான "பீஸ்ட்" படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டது இதனால் நெல்சனுக்கு கடுமையான விமர்சனங்களும் வந்தன. ஆனால் "ஜெயிலர்" படத்தின் மூலம் அவர் அந்த விமர்சனங்களை தூக்கி வீசினார்.


மேலும் தற்போது இந்திய சினிமாவில் அதிக சம்பளம் பெறும் இயக்குநர்களில் ஒருவர் என நெல்சன் அறியப்படுகிறார். ஜெயிலர் படத்தின் வெற்றியின் பின்னர் தற்போது "ஜெயிலர் 2" படத்தையும் இயக்கி வருகிறார். இதன் பின் அவரது அடுத்த படத்திற்கு ரசிகர்களிடையே ஆவலான எதிர்பார்ப்பு உள்ளது.


இதன் அடிப்படையில் நெல்சன் அடுத்ததாக தெலுங்கு நடிகர் ஜூனியர் என் டி ஆர் உடன் கூட்டணி வைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜூனியர் என் டி ஆர் தனது ஒரு சமீபத்திய படத்தின் வெற்றி நிகழ்ச்சியில் இந்த விவகாரத்தை மறைமுகமாக உறுதி செய்துள்ளார். இந்த புதிய படத்தை நாக வம்சி தயாரிக்கின்றார். வம்சி மற்றும் ஜூனியர் என் டி ஆர் கூட்டணியில் விரைவில் புதிய படம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது இதற்கு விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

Advertisement