தற்பொழுது நீதிபதியின் மகன் செய்தியாளர் சந்திப்பில் கதைத்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. இதில், அவர் கூறியதாவது, "என் வீட்டுப் பெண்களை அடித்ததால் தான் நான் மிகவும் கோபமடைந்தேன். அதை யாரோ ஒரு யூடியூபர் வீடியோ எடுத்துள்ளார். ஆனால், அது சண்டை நடந்த பிறகு எடுக்கப்பட்ட வீடியோவில் தான் நான் கத்தினேன்" என்று விளக்கமளித்துள்ளார்.
நீதிபதியின் மகன் செய்தியாளர் சந்திப்பில் உருக்கமாக பேசியதன் பின்னர், மீண்டும் தர்ஷன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது, பார்க்கிங் தகராறில் உண்மை என்ன என்பது குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்த சம்பவம், பார்க்கிங் தகராறு தொடர்பாக ஏற்பட்ட சண்டையில் உண்மையான நிலையை வெளிக்கொண்டு வரும் விதமாக விவாதிக்கப்படுகின்றது. இந்தப் பிரச்சனையில் யாருடைய தவறு உள்ளதென்பது தொடர்பாக மக்கள் மத்தியில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது.
செய்தியாளர்களை நேரடியாக சந்தித்த நீதிபதியின் மகன், "தயவு செய்து யூடியூபர்கள் என்னைத் தவறாக காட்டும் வகையில் வீடியோக்களை வெளியிடுகிறார்கள். அவ்வாறு செய்யவேண்டாம், என்றதுடன் சாதாரணமாக ஒரு பெண் மீது கை வைத்தால் யாருக்கு என்றாலும் கோபம் வரும் அதனாலேயே நானும் கத்தினேன்" என்று கூறியுள்ளார்.
தற்பொழுது இந்த விவகாரத்தில் நீதிமன்ற தரப்பிலிருந்து இப்படி ஒரு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் வழக்கு தர்ஷன் பக்கம் திரும்பியுள்ளது. இதனால் உண்மை நிலை விரைவில் வெளிவரும் என அனைத்து மக்கள் மற்றும் திரைபிரபலங்களும் எதிர்பார்க்கின்றனர்.
Listen News!