சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், பார்வதி வீட்டில் சிந்தாமணி ரோகிணியுடன் பேசிய விஜயா க்ரிஷை வீட்டில் இருந்து விரட்டுவதற்கு திட்டம் போடுகின்றார்.
அந்த நேரத்தில் க்ரிஷின் அம்மா இறந்துட்டாங்க என்றாலும் அவருடைய ஆவி அவருடைய பையனை சுற்றித்தான் வரும். ஒரு வேலை க்ரிஷின் உடம்புக்குள் அவருடைய அம்மாவின் ஆவி புகுந்தால் என்ன நிலைமை என்று விஜயாவை பயமுறுத்தும் வகையில் சிந்தாமணி பேசுகின்றார்.
அதன்பின்பு மகேஸ்வரி வீட்டில் ரோகிணி இருக்கும்போது அங்கு வந்த மீனா, க்ரிஷை என்ன சொல்லி வீட்டிற்குள் கூட்டி வந்தா? ஆனால் அது நடக்கிற மாதிரியே தெரியலையே என்று கேட்க, பார்வதி வீட்டில் நடந்தவற்றை சொல்லுகின்றார் ரோகிணி.

இதை கேட்ட மீனா நல்ல நேரம், அந்த ஆவி எனக்குள்ள புகுந்தது என்று சொல்லாமல் விட்டியே என்று சொல்ல, அந்த பாயிண்டை பிடித்துக் கொள்கின்றார் ரோகிணி. அதன்படி க்ரிஷின் அம்மாவின் ஆவி புகுந்து விட்டதாக அடுத்த ஆட்டத்தை ஆரம்பிக்க திட்டமிடுகின்றார்.
இதை தொடர்ந்து வீட்டுக்கு வந்த முத்து, டிவி காம்படிஷன் ஒன்றில் கலந்து கொள்வதற்கு மீனாவிடம் கேட்கின்றார். அதில் புருஷன் பொண்டாட்டிக்கு உள்ள ரகசியம் இருக்கலாமா? இருக்கக் கூடாதா? என்பதுதான் தலைப்பு. அதில் நாமதான் கலந்து கொள்ள வேண்டும் என்று சொல்ல, மீனாவிற்கு உடம்பு எல்லாம் வேர்த்து, தான் வரவில்லை என்று சொல்லுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட் .
Listen News!