தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகர் சிலம்பரசன். தற்போது முன்னணி நடிகராக வலம் வருகின்றார். இவர் காதல், கிசுகிசு, சர்ச்சை என அனைத்திலும் பேசப்பட்டவர்.
ஒரு கட்டத்தில் சிம்புவின் சினிமா வாழ்க்கை முடிந்து விட்டது என அனைவரும் நினைக்கும் நேரத்தில், அதிலிருந்து மீண்டு கம்பேக் கொடுத்தார்.
இதைத்தொடர்ந்து பத்து தல, தக்லைப் போன்ற படங்களில் நடித்தார். தற்போது சிம்பு நடிப்பில் அரசன் படம் ரிலீஸ் ஆக உள்ளது. அதே நேரத்தில் மலேசியாவில் நடந்த கார் ரேசிங்கில் அஜித் குமாரை நேரில் சென்று சந்தித்திருந்தார் சிலம்பரசன்.
இது தொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் கடும் வைரலானது . தற்போது உள்ள சிம்புவின் ஸ்டைலும் ரசிகர்களை கவர்ந்தது.

இந்த நிலையில், நடிகர் சிம்பு வழங்கிய பேட்டி ஒன்று வைரல் ஆகி வருகிறது. அதில் அவர் கூறுகையில், நான் யாரோ இல்ல.. நான் சிம்பு.. நான் எதுக்கு கல்யாணம் பண்ணனும்? திருமணம் நடக்கும் போது நடக்கும்.. தனியா இருக்கிறதும், யாரோடு இருக்கிறோம் என்பதும் ஒரு மேட்டர் கிடையாது.
நீங்க ஒழுங்கா நிம்மதியா இருக்கீங்களா? என்பது தான் மேட்டர். சந்தோஷமா இருக்கீங்களா? நாலு பேரை நிம்மதியா பார்த்துக் கொள்கின்றீர்களா? அது போதும்.. நான் இப்போ இப்படி பேச காரணமே ரொம்ப வாழ்க்கையில அடி வாங்கி இருக்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.
Listen News!