பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, மயில் சரவணன் சொன்னதை எல்லாம் நினைச்சுப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரம் பார்த்து ராஜி மயில் கிட்ட போய் நிற்கிறார். ராஜியைப் பார்த்த உடனே மயில் நான் வேணும் என்று எதுவுமே பண்ணேல என்று சொல்லி அழுகிறார்.

மேலும், பொய் சொல்லி இப்புடி ஒரு வாழ்க்கையே வேணாம் என்று வீட்டில இருக்கிறவங்களுக்கு சொன்னான் அவங்க கேட்கல என்கிறார். அத்துடன், ஒவ்வொரு நிமிஷமும் குற்ற உணர்ச்சியில துடிச்சுக் கொண்டிருக்கிறேன் என்கிறார் மயில். பின் நகை விஷயம் இவங்க யாருக்கும் தெரியாது ராஜி நீ சொல்லிடாத என்கிறார்.
அதனை அடுத்து கோமதி மயில் கிட்ட வந்து நீ எவ்வளவு பெரிய சுயநலவாதி உன்னை நினைக்க இன்னும் கோபம் தான் வருது என்கிறார். மேலும் என்ர பிள்ள அப்பாவி அவனை ஏமாத்த எப்புடி உனக்கு மனசு வந்தது என்று கேட்கிறார். அப்புடியே கொஞ்ச நேரம் கோமதி மயிலை பேசிக்கொண்டிருக்கிறார். அதைக் கேட்ட மயில் கதறி அழுகிறார்.

இதனைத் தொடர்ந்து பாண்டியன் கோமதி கிட்ட நானா ஒரு பொண்ணைப் பார்க்கிற வரைக்கும் எவ்வளவு பொறுமையா இருந்தான். ஆனா இவனோட வாழ்க்கை இப்ப எங்க வந்து நிக்குது பார்த்தியா என்று சொல்லி அழுகிறார். பின் அரசியும் அண்ணனை நினைக்க கவலையா இருக்கு தூக்கமே வரேல என்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!