• Oct 08 2024

ஃபங்ஷனில் மூக்குடைந்த முத்து... இந்த அசிங்கம் தேவையா? இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், முத்து செல்வத்துக்கு காசு கொடுக்க செல்வம் காசை வாங்க மறுக்கின்றார். என்ன காரணம் என முத்து திரும்ப திரும்ப கேட்கவும் செல்வம் சமாளித்துவிட்டு சவாரிக்கு செல்ல முற்படுகிறார்.

ஆனால் நீ இப்ப என்ன காரணம் என சொல்லவில்லை என்றால் தான் இத்துடன் இந்த நட்பை முடித்துக் கொள்வதாக முத்து சொல்லுகின்றார். இதனால் மீனா வந்ததாக சொல்லுகின்றார் செல்வம். அதன்பிறகு முத்து இந்த காசை எடுத்துக் கொள்.. அப்படி இல்லை என்றால் இத்தோட எங்களுடைய பிரண்ட்ஷி முடிஞ்சிடும் என்று சொல்லுகின்றார். செல்வமும் வேறு வழி இல்லாமல் காசை எடுத்துக் கொடுக்கின்றார்.

இதை தொடர்ந்து வீட்டுக்கு சென்ற முத்து மீனாவை மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று எதற்காக செல்வதற்கு இப்படி சொன்னாய் என பேசுகிறார். அதற்கு தான் நல்லதை தான் எடுத்து சொன்னதாக மீனா சொல்கின்றார். அத்துடன் முத்து பேங்கில் இருந்த காசை எடுத்துக் கொடுத்ததாக சொல்ல, ஏன் தன்னிடம் கேட்கவில்லை என்று மீனா பேசுகின்றார். உங்களுக்கும் உங்களுடைய அண்ணனுக்கும் என்ன வித்தியாசம் என்று பேச முத்து கோபத்தில் மீனாவுக்கு அறையச் செல்கின்றார்.

இதை தொடர்ந்து முத்து பங்க்ஷன்க்கு ரெடியாகி செல்ல அண்ணாமலை தனியாகவா போகப்போகிறாய்? என்று கேட்க, முத்து தடுமாறி கொண்டு இருக்கிறார். ஆனால் மீனாவும் ரெடியாகி வருகின்றார். இதனால் முத்து, அங்கே குடும்பம் எப்படி சந்தோஷமாக இருக்கின்றது என்பதை பாரு என மீனாவை அழைத்துச் செல்கின்றார்.


அங்கு சென்றதும் செல்வம் தனது உறவினர்களுடன் குடித்து கொண்டாடிக் கொண்டு இருப்பதை முத்து பார்க்கிறார். அதில் முத்துவின் நண்பர் ஒருவர் நீ கொடுத்த காசு சரக்குக்கு மட்டுமே சரியா போயிருக்கும் என சொல்ல, முத்து ஒரு மாதிரி இருக்கின்றார். 

அதன் பின்பு சாப்பாடு சரியில்லை என செல்வத்தின் உறவினர் தகராறு பண்ண, முத்து போய் தட்டி கேட்கிறார். இதனால் அங்கிருந்தவர்கள் எல்லோரும் முத்துவை பிடித்து இழுத்து கீழே தள்ளி விடுகின்றார்கள். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement