• Jan 18 2025

கிழவி மாதிரி பேசுற-னு சொல்லுறாங்க.. எனக்காக என் அப்பா எப்பவும் இருப்பாரு..! AR ரகுமானின் மகள் உருக்கம்

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், 30 ஆண்டுகளாக தன்னுடைய தனித்துவமான பாடல்களாலும், இசையாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த இசையமைப்பாளராக வலம் வருகிறார். சமீபகாலமாக பல இசைக்கச்சேரிகளையும் நடாத்தி வருகின்றார்.

தமிழ் சினிமாவில் ஏ.ஆர் ரகுமானை போலவே அவரது வாரிசுகளும் இசை மீது அதிக ஆர்வம் கொண்டு உள்ளார்கள். அவர் மகன் அமீர் பாடகரா திகழ்ந்து வருகிறார். ஒரு சில இசை ஆல்பங்களையும் உருவாக்கி உள்ளார்.

அதேபோல ஏ.ஆர் ரகுமானின் மூத்த மகளான கதீஜா ரகுமானும் எந்திரன் படம் முதல் பொன்னியின் செல்வன் படம் வரை 2 பிளாக் பாஸ்டர் படங்களில் பாடியுள்ளார். மேலும் இவர், கடந்த ஆண்டு ரியாசுதீன் ஷேக் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.


இந்த நிலையில், தற்போது பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டி  அளித்துள்ளார் ஏ.ஆர் ரகுமானின் மூத்த மகள் கதீஜா. அதன்படி அவர் கூறுகையில்,

என்னுடைய குரல் நன்றாக இருக்கிறது என்று பலர் சொல்லும் போது அதற்காக நாம் நிச்சயமாக உழைக்கின்றோம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், எனக்கு மிகவும் நான் உண்மையாக இருக்கிறேன் என்பது தான் முக்கியமான விடயம். நான் முதலில் எனக்கு உண்மையாக இருக்க முயற்சி செய்கிறேன். பொய்யாக வாழ விரும்பவில்லை. 


வாழ்க்கை மிகவும் குறுகியது. எனது வாழ்க்கையில் இந்த விஷயங்கள் செய்யாமல் விட்டு விட்டோமே என வருந்தியதே கிடையாது. என்னுடைய சகோதரி மிகப் பெரிய பலமாக எனக்கு இருக்கிறார். அப்பா, தம்பி என்னுடைய கணவர் ஆகிய மூன்று பேரும் எனக்காக எப்போதும் இருப்பார்கள்.

சில விஷயங்களை நான் காரசாரமாக பேசும் போது இந்த வயதில் உங்களுக்கு ஏன் இந்த வேலை என்று சுற்றி இருப்பவர்கள் யோசிப்பார்கள். கல்லூரி சென்றால் என்னுடைய நடை, உடை, பாவனை எல்லாம் மாறிவிடும் என்று சொன்னார்கள். 

ஆனால் இன்று எனக்கு என்ன தோன்றுகிறதோ அதை தான் நான் செய்கிறேன். நாளைக்கு என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் செய்வேன். இதனால் என்னுடன் இருப்பவர்கள் என்ன கிழவி மாதிரி  பேசுறா, கிழிவி மாதிரி நடந்துக்கிற என்றெல்லாம் சொல்லுவார்கள். நீங்கள் ஏன் என்னை பற்றி கவலைப்படுகிறீர்கள். நான் யாரையும் பற்றி பேசவில்லையே என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார் கதீஜா.

Advertisement

Advertisement