• Apr 17 2026

இளையராஜா பயோபிக்கில் இணைகிறார்களா சிம்பு, விஷால்? என்ன கேரக்டர்கள்?

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

இசைஞானி இளையராஜா வாழ்க்கை வரலாறு திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்பட்டது. 

இந்த படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது குறித்த அறிவிப்பு இல்லை என்றாலும் இளையராஜா தான் இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் இளையராஜாவின் நெருங்கிய நண்பர்களான கமல்ஹாசன், ரஜினிகாந்த், வைரமுத்து மற்றும் ஏஆர் ரகுமான் உட்பட பல கேரக்டர்கள் இருப்பதாகவும் அந்த கேரக்டர்களில் நடிக்க அவர்களையே தேர்வு செய்ய திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 



இந்த நிலையில் வைரமுத்து மற்றும் ஏஆர் ரகுமான் ஆகிய இருவரும் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படும் நிலையில் அவர்களது கேரக்டர்களில் நடிக்க நடிகர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. தற்போதைய தகவலின்படி வைரமுத்து கேரக்டரில் விஷால் நடிக்க இருப்பதாகவும் ஏஆர் ரகுமான் கேரக்டரில் சிம்பு நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இளையராஜா மற்றும் வைரமுத்துவுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை சம்பந்தமான காட்சிகள் இருக்குமா? அதே போல் ஒரே மேடையில் விருது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் இளையராஜா மற்றும் ஏஆர் ரகுமான் பேசிய காட்சிகள் இருக்குமா என்றெல்லாம் கேள்விகள் எழுந்துள்ளது. ஆனால் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் அவருடைய பாசிடிவ் சைடு மட்டுமே இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement