• Jan 19 2025

உங்க மரியாதைக்கு பிராப்ளம் வர போகுது விஜயா..! சரக்கு போத்தலை கையில் எடுத்த முத்து! சிக்கிய ரோகிணி

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய நாளுக்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம். 

அதில், ரோகிணியின் அப்பா வர தாமதிப்பதால் முதலில் ஸ்ருதிக்கு தாலி பிரித்து கோர்க்கலாமென விஜயா முடிவு எடுக்கிறார். ஸ்ருதியின் அம்மாவிடம் சென்று இந்த விழாவ நீங்கதான் நடத்துறீங்க அதனால உங்க பொண்ணுக்கு தான் முதல் மரியாதை கிடைக்கனும். ஸ்ருதிக்கு தாலி பிரித்து போட்ட பிறகு ரோகிணிக்கு செய்யலாம் என்று சொல்ல, நேராக ரோகிணியிடம் வந்த சுதா, உங்க அத்தை ஸ்ருதிக்கு தாலி பிரித்து போட்ட பிறகு உனக்கு போடலாம்னு சொல்றாங்க உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையா என்று கேட்கிறார்.

அதற்கு ரோகிணி, எனக்கு ஒன்னும் பிராப்ளம் இல்ல, என்னோட அப்பா வந்துட்டு இருக்காரு என்று சொல்லி விஜயாவின் திட்டத்தை புரிந்து கொள்கிறார். அதன்பின், உங்க அப்பா வாராரா? இல்லையா? என்னிடம் ஆவது உண்மையை சொல்லு என்று மனோஜ் கேட்க, ரோகிணி கோபப்படுவது போல பேசி சமாளித்து விடுகிறார்.

அதன் பிறகு ஸ்ருதிக்கு தாலி பிரித்து போடும் பங்க்ஷன் நடக்கின்றது. மறுபக்கம் ரோகிணி ஏற்பாடு செய்த நபர் முத்துவை ப்ரைன் வாஷ் பண்ண தொடங்குகிறார். இதை தொடர்ந்து ரோகிணிக்கு மாலையை போட்டு மேடைக்கு அழைத்து வருகின்றனர். ரோகிணியை பார்த்து விஜயா முறைக்கிறார்.


இன்னொரு பக்கம் ரோகிணி செட் பண்ணிய நபர் முத்துவை, வாங்க வெளிய போய் நடந்துட்டு வரலாம் என்று கார் பார்க்கிங்க்கு  கூட்டிச் செல்கிறார். அங்கு கார் டிக்கியை ஓபன் பண்ணி சரக்கு பாட்டிலை எடுத்து வைக்கிறார்.

ரெண்டு, மூணு கட்டிங் போட்டு போய் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும் என சொல்ல,  இங்க எப்படி எனக்கு வேண்டாம் என்று முத்து மறுக்கிறார். ஆனால் கூச்சப் படாதீங்க பாஸ் யாரும் பார்க்க மாட்டாங்க என சொல்லி முத்து கையில் சரக்கை கொடுக்கிறார்.

இன்னொரு பக்கம், வாசு தேவனிடம் உறவினர் ஒருவர் உங்களுக்கு பெரிய  மனசு. இந்த விழாவை உங்க பொண்ணுக்கு மட்டும் இல்லாம அவங்க பெரிய மருமகளுக்கும் சேர்த்து செய்து இருக்கீங்க என சொல்ல, அவங்களுக்கு வசதி இல்ல. நாம சாப்பிட்ட மிச்சத்தை இல்லாதவங்க கொடுக்கிறது இல்லையா அப்படித்தான் என்று அவமானப்படுத்துவது போல் பேசுகிறார்.

இதை கேட்ட பரசு, இந்த ஆளை சும்மா விடக்கூடாது என்று அண்ணாமலையிடம் சொல்ல, அவரை பொறுமையா இருக்குமாறு அண்ணாமலை அடக்குகிறார்.

அதன்பின், மண்டபத்தின் பின்னாலே திரும்பி பார்த்தபோது முத்து அங்கு இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைகிறார் அண்ணாமலை. இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement