பொன்ராம் இயக்கத்தில் விஜயகாந்தின் மகனான சண்முக பாண்டியன் ஹீரோவாக நடித்திருக்கும் படம் தான் கொம்பு சீவி. இந்த படத்தில் சரத்குமார் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். மேலும் நாட்டாமை படத்தில் டீச்சராக வந்த ராணி மகளும் இதில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார்.
கொம்பு சீவி திரைப்படத்தில், ஊரில் பெரிய மனுஷனாக சரத்குமார் காணப்படுகின்றார். பெயருக்குத்தான் பெரிய மனுஷன் என்றாலும் மீன் கடத்துவது, கஞ்சா கடத்துவது என பல வேலைகளில் ஈடுபடுகின்றார். ஆனாலும் இதனால் ஊர் மக்களுக்கு நன்மை செய்கின்றார்.
ஒரு கட்டத்தில் ரவுடிகளிடம் சரத்குமார் மாட்டிக்கொள்ள, உயிர் போகும் நேரத்தில் சண்முக பாண்டியன் அவரை காப்பாற்றுகின்றார். அதற்கு பின்பு இருவரும் ஊர் மக்களுக்காக கஞ்சா வியாபாரம் செய்கின்றனர். எனினும் ஒரு கட்டத்தில் 5 கோடி ரூபாய் டீலை முடித்தால் கிராமத்தில் உள்ள பிரச்சனை முடிந்து விடும் என நினைத்து இருவரும் களமிறங்கின்றனர்.

இதனால் அவர்கள் அதை விற்பனை செய்தார்களா? இல்லை பொலிஸில் சிக்கினார்களா? என்பது தான் கொம்பு சீவி படத்தின் மீதிக் கதையாக இருந்தது.

இந்த நிலையில், சரத்குமார் அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது. அதில் அவர் கூறுகையில், பா. ரஞ்சித்தும் மாரி செல்வராஜூம் சாதி படங்களை எடுக்குறாங்க என்று சொல்லுறாங்க.. ஹாலிவுட்டில் யூதர்கள் தங்களை என்ன செஞ்சாங்கன்னு, தாங்கள் அனுபவிச்ச வலிகளை இப்பவும் கருப்பின மக்கள் படமா எடுத்துக்கிட்டு தான் இருக்காங்க..
அதனால நீங்க ஏன் இப்படி படம் எடுக்குறீங்கன்னு கேலி பண்ணக்கூடாது.. அவங்க வலிய வெளிப்படுத்துவதை நாம் ஏற்றுக்கொண்டு தான் ஆகணும்.. படத்தை படமா மட்டும் பாருங்க.. நான் மாரியோட எல்லா படங்களும் பார்த்திருக்கின்றேன்.. நான் பார்த்ததிலேயே அவர் ஒரு ஆகச் சிறந்த இயக்குனர் என்று தெரிவித்துள்ளார்..
Listen News!