• Dec 29 2025

சென்னை அணியை கைப்பற்றிய ஐசரி கணேஷ்.. கிரிக்கெட் ரசிகர்களுக்கு வெளியான அதகள அப்டேட்.!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (CCL) 2026 சீசன், திரை உலக நட்சத்திரங்களின் கிரிக்கெட் ஆர்வத்தையும் ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் மின்னல் வேகத்தில் உயர்த்திய நிகழ்ச்சியாக இருக்கிறது.

ஆண்டுதோறும் இந்திய திரை உலக பிரபலங்கள் கலந்து கொள்ளும் இந்த கிரிக்கெட் போட்டி, ரசிகர்கள் மத்தியில் அதிக ஆர்வத்தையும் உந்துதலையும் பெற்றுவருகிறது. இந்த ஆண்டு தொடர் 2026 ஜனவரி மாதம் தொடங்க இருக்கிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


CCL என்பது கிரிக்கெட் மற்றும் திரை உலக நட்சத்திரங்களை ஒன்றிணைக்கும் தனித்துவமான போட்டியாகும். இந்தியாவின் பிரபலமான celebrity‑sport eventஆக இது காணப்படுகிறது. CCL இல் பங்கேற்கும் வீரர்கள் திரை உலக பிரபலங்கள் என்பதால், ஒவ்வொரு சீசனும் ரசிகர்களுக்கு மிகுந்த ஆற்றலை கொடுக்கும் ஒரு திரில்லிங் அனுபவமாக இருக்கிறது.

2026 சீசனுக்கான முக்கிய அப்டேட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வருடங்களாக சென்னை ரைனோஸ் என அறியப்பட்ட அணியை தற்போது தமிழ் சினிமா தயாரிப்பாளர் ஐசரி K. கணேஷ் மற்றும் நடிகை ஸ்ரீபிரியா ஆகியோர் வாங்கியுள்ளனர்.


அதனுடன், Chennai அணியின் பெயர் VELS CHENNAI KINGS என அதிகாரபூர்வமாக மாற்றப்படுவதாக ஐசரி கணேஷ் அறிவித்தார். இது CCL ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை கிளப்பியுள்ளது. 

Advertisement

Advertisement