• Feb 21 2025

"சட்டைய ஒழுங்கா போடு.." சத்யாவை மிரட்டிய மனைவி..!

Mathumitha / 5 days ago

Advertisement

Listen News!

பிக்போஸ் நிகழ்ச்சியில் மிகவும் வலுவான போட்டியாளர் என எதிர்பார்க்கபட்ட போட்டியாளர் தான் சத்யா கனா காணும் காலங்கள் 2 சீரியலில் மிகவும் பயங்கரமான பொல்லாத வாத்தியாராக நடித்து ரசிகர்களை கவர்ந்த இவர் வீட்டிற்குள் மிகவும் அமைதியாக இருந்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.


பின்னர் சத்யா ,ஜெப்பிரி, விஷால்  கூட்டணி அருமையாக அமைந்தமையினால் அனைவராலும் அதிகம் விரும்பப்பட்ட சத்யா ஜாக்குலின் வெளியே செல்லும்போது சிரித்தமையினால் விமர்சனத்திற்கும் ஆளாகினர் அதற்கான தெளிவான விளக்கத்தை கொடுத்த இவருக்கு மனைவி மகன் பெரிய பலமாக உள்ளனர். அவரது இந்த குழந்தை தனமான சிரிப்புக்கு பின்னால் இவரது அழகிய குடும்பம் இருப்பதே ஒரு காரணமாகும்.


இந்த நிலையில் தற்போது நடந்த நேர்காணல் ஒன்றில் சத்யா மற்றும் அவரது மனைவி கலந்து கொண்டுள்ளனர். இவர் வீட்டிற்குள் இருக்கும் போது வெளியில் சத்யா உள்ளே சட்டை போடாமல் சுத்துறார் என எழுந்த விமர்சனங்களை பேசி சிரித்து கொண்டிருந்தபோது சத்யாவின் mic கீழே நழுவியதும் நேர்காணல் செய்பவர் சார் mic ஒழுங்கா வையுங்க என சொல்ல சத்யாவின் மனைவி சட்டையை ஒழுங்கா போடு இல்லாட்டி மேடம் பேசுவாங்க என நகைச்சுவையாக பேசியுள்ளனர்.

Advertisement

Advertisement