• Jan 18 2025

மொத்த குடும்பமும் இடிஞ்சி போயிருக்க... ஜனனிக்கு ரொமான்ஸ் -சும், கதிருக்கு ஆட்டமும் கேக்குதோ..!! பகிர் வீடியோ

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல்களில் ஒன்றுதான் எதிர்நீச்சல். இந்த சீரியல் அளவு கடந்த ரசிகர்களை தன் பக்கம் கட்டிப்போட்டு வைத்துள்ளது.

இந்த சீரியல் தர்ஷினி கடத்தப்பட்ட சம்பவத்தில் ரொம்பவும் டல் அடித்த நிலையில், இந்த மாதம் அடித்து பிடித்து டிஆர்பி ரேட்டிங்கில் சற்று முன்னுக்கு வர ஆரம்பித்துள்ளது.

ஆணாதிக்கம் நிறைந்த வீட்டில் அங்கு மருமகளாக சென்ற பெண்களும், பெண் குழந்தைகளும் எதிர்நோக்கும் பிரச்சனைகளும், அதை அவர்கள் முறையடித்தார்களா? வெற்றி பெற்றார்களா? ஆதி குணசேகரன் தீட்டும் சதி திட்டம் ஆகியவை ரசிகர்களை சற்று சலிப்படைய வைத்தாலும், இந்த சீரியல் முன்னிலையில் தான் எடுத்துச் செல்கிறது.

எதிர்நீச்சல் சீரியலில் ஆணாதிக்கத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் முக்கிய கதாபாத்திரமாக நடித்து வருபவர் தான் ஜனனி. இவர் குணசேகரனின் தம்பியான சக்தியை திருமணம் செய்து வீட்டிற்கு வந்ததிலிருந்து சந்தோஷமாக பேசியதை விட அழுது சண்டை போட்ட காட்சிகள் தான் அதிகம்.


அதைப்போல இந்த சீரியலில் குணசேகரனின் தம்பியாக நடித்தவர் தான் கதிர். அவர் ஒரு காலத்தில் அண்ணனின் வாக்கு தான் வேத வாக்கு என இருந்தார். ஆனால் தற்போது குணசேகரருக்கு எதிராக மொத்த சகோதரங்களும் உண்மையின் பக்கம் திரும்பி உள்ளார்கள். அதில் கதிரும் திருந்தி தனது குடும்பத்திற்கு உகந்த ஒருவராக மாறியுள்ளார்.


இந்த நிலையில், எதிர்நீச்சல் சீரியல் எப்போதும் சீரியஸாக சென்று கொண்டிருக்கும் நிலையில், ஜனனி சக்தியுடன் ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார். மறுபக்கம் கதிரும் தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இவற்றை பார்த்த ரசிகர்கள், மொத்த குடும்பமும் குழம்பி போய் இருக்க, உங்களுக்கு ஆட்டம், கொண்டாட்டம் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இதேவேளை, எதிர்நீச்சல் சீரியலில் கதிர் கேரக்டரில் நடிக்கும் கதிர்,  கோவில் திருவிழா ஒன்றில் ஆடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement