• Jan 19 2025

கோபிக்கு தெரியவந்த உண்மை.. உடைந்து போன ராமமூர்த்தி! பாக்கியலட்சுமியில் இன்று..

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், ஈஸ்வரியை போலீசார் அரெஸ்ட் பண்ணி கொண்டு போக அங்கு வந்த கோபியை வெளுத்து வாங்குகிறார் ராமமூர்த்தி. மேலும் தனக்கு எதுவுமே தெரியாது என்று இனியா மேல் சத்தியம் பண்ண போக, எழில் அதை தடுத்து நிறுத்தி கோபிக்கு பேசி அனுப்புகிறார். இறுதியில் பாக்கியா ராமமூர்த்தியை சமாதானப்படுத்தி அழைத்துச் செல்ல, அயல்வீட்டார்கள் எல்லாரும் கோபிக்கு பேசி விட்டு செல்கிறார்கள்.

இதை தொடர்ந்து நேரே வீட்டுக்குச் சென்ற கோபி, ராதிகாவிடம் எதுக்கு ரோட்டுக்கு வந்து நின்ற? எங்க அம்மாவை வீட்டை விட்டு துரத்தியும் உன்ட வன்மம் போகலையா? என ராதிகாவுக்கு பேசிக் கொண்டிருக்க, அங்கு வந்த கமலா அவளை எதுக்கு பேசுறீங்க கம்ப்ளைன்ட் கொடுத்தது நான் தான் என சொல்கிறார். இதனால் ஆத்திரமடைந்த கோபி கமலாவை மரியாதை இல்லாமல் கண்டபடியாக பேசுகிறார்.

அந்த நேரத்தில் மையூ அங்கு வர, பேச்சை நிப்பாட்டி விட்டு போலீஸ் ஸ்டேஷன் போய் பார்க்கிறேன். அங்க அம்மாவுக்கு ஏதும் நடந்துச்சுன்னா சும்மா விட மாட்டேன் என எச்சரித்து செல்கிறார். 

கோபி போலீஸ் ஸ்டேஷன் சென்றதும், அங்கு இருந்த ராமமூர்த்தி நீ ஈஸ்வரியை பார்க்க கூடாது என அவரை அடித்து விரட்டுகிறார். அதன் பின்பு கோபி ஒரு மாதிரி உள்ளே சென்று போலீசிடம் தான் அம்மாவை பார்க்க வேண்டும் என கேட்க, அவரை பார்க்க முடியாது. அவரை கோர்ட்டுக்கு அழைத்துச் செல்ல போகிறோம் என அதிர்ச்சி கொடுக்கின்றார்கள்.


இறுதியாக ஈஸ்வரியை ஜிப்பில் அழைத்துச் செல்ல, ஒரு பக்கம் ஈஸ்வரி கதறுகிறார். ராமமூர்த்தியும் ஈஸ்வரியை பார்த்து அழுகின்றார். கோபி எதுவும் செய்ய முடியாமல் நின்று பார்த்துக் கொண்டிருக்கின்றார். 

அதன் பின் வீட்டுக்கு வந்த ராமமூர்த்தி உடைந்து போய் உட்கார்ந்து இருக்க, எல்லோரும் ஈஸ்வரி பற்றி நினைத்து கவலையில் இருக்கின்றார்கள். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement