பிரபல நடிகர் அஜித் சமீபத்தில் துபாயில் 24 மணி நேரம் நடைபெற்ற கார் ரேசில் தனது குழுவினருடன் பங்கேற்றார். இந்த கார் ரேசில் 911 GT3 R என்ற பிரிவில் அஜித் குமாரின் அணி 3வது இடத்தை பிடித்துள்ளனர். அஜித்தின் வெற்றிக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ராஜனிகாந்தும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித் படங்களில் நடிப்பதை தாண்டி தனக்கு விருப்பமான கார் ரேசிங்கில் கலந்து கொள்வதையும் வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் துபாயில் நடந்த கார் ரேசில் 911 GT3 R என்ற பிரிவில் இவருடைய அணி 3ம் இடத்தினை பெற்றது. இந்த வெற்றிக்கு திரையுலக நட்சத்திரங்களில் இருந்து அரசியல்வாதிகள் வரை பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது வாழ்த்துக்களை சமூக வலைத்தளம் மூலம் அஜித்திற்கு தெரிவித்து பதிவொன்றை ஷேர் செய்துள்ளார். அந்த பதிவில்" எனது அன்பான அஜித்துக்கு வாழ்த்துக்கள். நீங்கள் சாதித்துவிட்டிர்கள். இறைவன் அருள் கிடைக்கும், லவ் யு என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Congratulations my dear #AjithKumar. You made it. God bless. Love you.#AKRacing
Listen News!