பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, மீனா பாண்டியனைப் பார்த்து தாலி பிரிச்சுக் கோர்க்கிற function நடக்கும் போதே எனக்குத் தெரியும் இவங்க அக்காவுக்கு கவரிங் நகை தான் போட்டவங்க என்று சொல்ல... பாக்கியம் அதுக்கு நீ என்னம்மா புதுசா ஒரு கதையை சொல்லுற என்று கேட்கிறார். பின் மீனா நான் ஒன்னும் கதை சொல்லல... இவங்க பேசினத நானும் ராஜியும் கேட்டோம் என்கிறார்.
அதுக்கு மயிலோட அப்பா நாங்க என்ன பேசினோம் என்று சிரிச்சுக் கொண்டு கேட்கிறார். அதைத் தொடர்ந்து கதிர் நடிக்காதீங்க இந்தப் பிரச்சனை ஆரம்பிக்கும் போதே ராஜி என்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டால் என்கிறார். அதைக் கேட்ட கோமதி ஷாக் ஆகுறார். பின் சரவணன் நாங்க உங்ககிட்ட நகை கேட்டோமா.. நீங்களாத் தானே கொடுத்தீங்க என்று சொல்லுறார்.

மேலும், எதுக்கு நீங்க இப்புடி ஒரு வேலை செய்தனீங்க என்று கேட்கிறார். அதைக் கேட்ட பொலிஸ் எதுக்கு இப்புடி எல்லாம் கத்துறீங்க இங்க சத்தம் போடக் கூடாது என்கிறார். பின் மீனா பொலிஸ் கிட்ட இவங்க எல்லாரும் என்ர பொண்ணோட வாழ்க்கை போயிடும் என்று சொல்லி அழுதாங்க அதுதான் நாங்க இவளா நாளா எதுவுமே சொல்லேல என்கிறார். அதைக் கேட்ட பாக்கியம் இவங்க பொய் சொல்லுறாங்க என்கிறார்.
பின் பொலிஸ் மயிலை ஸ்டேஷனுக்கு வரச் சொல்லுறார். அதைத் தொடர்ந்து மயில் நகை விஷயத்தில எப்படி பொய் சொல்ல முடியும் என்று பாக்கியத்திட்ட கேட்கிறார். பின் மயில் பொலிஸ் முன்னாடி நான் 80 பவுண் தங்க நகையோட தான் புகுந்த வீட்டுக்குப் போனேன் என்கிறார். அதைக் கேட்ட மீனா ஷாக் ஆகுறார். அதைத் தொடர்ந்து மீனா அண்டைக்கு நாங்க வீடியோ தானே எடுத்தோம் என்று பொய் சொல்லி மயிலை உண்மையை சொல்ல வைக்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!