சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், முத்து மீனா சாப்பாடு விஷயத்தில் இருவரும் சாப்பிடவில்லை என அதற்கு பிறகு சமாதானம் ஆகின்றார்கள்.
இன்னொரு பக்கம் மனோஜ் ரோகிணியை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருக்க, அங்கு வந்த விஜயா ரோகிணியை மறக்குமாறும், தான் உனக்கு புது வாழ்க்கை அமைத்து தருவதாகவும் சமாதானம் கூறுகின்றார்.
மேலும் பார்வதி வீட்டுக்குச் சென்று, இது எல்லாம் உன்னால்தான் நடந்தது, நீதான் ரோகினியை அறிமுகம் செய்து வைத்தாய் என்று விஜயா பார்வதியை திட்ட, நான் உனக்கு அறிமுகம் செய்து தான் வைத்தேன். ஆனால் உன்னுடைய பேராசை தான் இதற்கு எல்லாம் காரணம் என்று பார்வதி பதிலடி கொடுத்தார்.
இதை தொடர்ந்து விஜயா வீட்டுக்கு வந்த ஸ்ருதியின் அம்மா விஷயத்தை அறிந்து அவர்களை அசிங்கப்படுத்துகின்றார். மேலும் ஸ்ருதி இந்த வீட்டில் இருப்பது எனக்கு பிடிக்கவில்லை என்னுடைய சொந்தக்காரர்கள் என்னை கேலி செய்கின்றார்கள் என்று இந்த சான்ஸை பயன்படுத்தி அண்ணாமலையையும் விஜயாவையும் லெப்ட் அண்ட் ரைட் வாங்குகின்றார்.

ஆனால் அண்ணாமலை இது எங்களுடைய பிரச்சனை, உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் உங்களுடைய மகளுடன் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள் இப்போது கிளம்புங்கள் என்று கூறுகிறார்.
இறுதியில் மீனாவின் அம்மா வீட்டிற்கு வித்யாவும் அவருடைய கணவரும் வருகின்றார்கள். இதன்போது முத்து, வித்யாவும் மீனாவும் கூட்டுக் களவாணிகள் என முருகனிடம் பேசுகிறார். இதுதான் இன்றைய எபிசோட் .
Listen News!