பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், கோபி மீது பாக்கியா கொடுத்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெறுகின்றது. இதன்போது திடீரென பாக்கியா கோபி மீது கொடுத்த கேசை வாபஸ் வாங்குவதாக தெரிவிக்கின்றார்.
இதனால் கோபப்பட்ட நீதிபதி வாபஸ் வாங்குவது என்றால் எதற்காக கேஸ் கொடுத்தீங்க? என்று பாக்கியாவை சரமாரியாக திட்டுகின்றார். ஆனாலும் இது எங்களுடைய குடும்பப் பிரச்சனை நாங்களே பேசி தீர்த்துக் கொள்கின்றோம் என்னை மன்னித்து விடுங்கள் என்று சொல்லவும், குடும்ப பிரச்சினை என்றால் எதற்கு கோர்ட்டுக்கு வந்தீங்க என்று திட்டுகின்றார் நீதிபதி.
இறுதியில் கோபியை கேசில் இருந்து விடுவித்து வழக்கை தள்ளுபடி செய்கிறது நீதிமன்றம். இதனால் கோபி நீதிமன்றத்தை விட எனக்கு பெரிய தண்டனை கொடுத்து விட்டாய் என்று பாக்யாவிடம் மனம் வருந்தி பேசுகின்றார். அதன் பின்பு வீட்டுக்கு வந்த கோபி பாக்கியா கேஸை வாபஸ் வாங்கிய விஷயத்தை சொல்லுகின்றார்.
இதன்போது ஈஸ்வரி இதை ஆரம்பத்திலேயே செய்திருக்கலாம் தானே என்று அதற்கும் பாக்கியாவுக்கு தான் திட்டுகின்றார். ஆனால் கோபி இதுவே வேற யாரும் என்றால் என்னை களி திண்ண வைத்திருப்பார்கள்.. பாக்யா மீது எந்த தப்பும் இல்லை என்று பாக்யாவுக்கு ஆதரவாக பேசி விட்டு செல்கின்றார்.
இதை தொடர்ந்து பாக்யா சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அங்கு ராதிகா செல்லுகின்றார். அவர் சமைக்கவில்லை என்று அறிந்த பாக்கியா அவரை அமர்ந்து சாப்பிடுமாறு சொல்லுகின்றார்.
இதன் போது கோபிக்கு நீங்க நல்லது செய்த போதும் ஈஸ்வரி அத்தை உங்களை திட்டுகின்றார். அதற்கு நீங்கள் ஏன் பதிலடி கொடுக்கவில்லை என்று ராதிகா கேட்கிறார். இவர்கள் இருவரும் கதைத்துக்கொண்டு இருப்பதை ஈஸ்வரி வெளியில் நின்று ஒட்டு கேட்டு கொண்டுள்ளார்.
அதற்கு பாக்கியா நான் பேச வேண்டிய நேரங்களில் தான் பேசுகின்றேன். அத்தைக்கு இன்னும் ஒரு அன்பான முகம் இருக்குது. அதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். எனக்கு ஆதரவா நிறைய விஷயங்கள் செய்திருக்காங்க என்று சொல்லுகிறார்..
அதன் பின்பு பாக்கியா ரெஸ்டாரன்ட் கிளம்பி போனதும் ராதிகாவிடம் சென்ற ஈஸ்வரி இதுதான் உன்னுடைய பிளானா? குடும்பத்தை பிரிக்க பாக்குறியா? பாக்யாவிடம் எதற்கு அப்படி சொன்னாய் என்று கேள்வி கேட்கின்றார்.
அதற்கு நான் பாக்கியா போல இருந்தால் உங்களை தட்டி வைத்திருப்பேன். என்கிட்ட அதிகமாக பேசக்கூடாது என்று ஈஸ்வரியை மிரட்டுகிறார்..
Listen News!