சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், பார்வதி வீட்டுக்கு செல்லும் விஜயா, அங்கு வந்த சிந்தாமணியிடம் வீட்டிற்கு க்ரிஷ் வந்ததாகவும் அது தனக்கு பிடிக்கவில்லை அவனை எப்படியாவது வீட்டை விட்டு விரட்ட வேண்டும் என்றும் ஐடியா கேட்கிறார்.
இதன்போது சிந்தாமணி, அவனுக்கு உங்கமீது பயம் வர்ற மாதிரி எதுவும் பண்ணுங்க. கம்பியால சூடு வைங்க என்று சொல்ல, அங்கு இருந்த ரோகிணி திட்டுகின்றார். எனினும் சமாளிப்பதற்காக போலீஸ் வரும் என்று விஜயாவுக்கு பயம் கொடுக்கின்றார்.
அதன் பின்பு ஆட்களை வைத்து கடத்துவதற்கு திட்டம் போடுகின்றார்கள். இதனால் இந்த விஷயத்தை ரோகிணி மீனாவிடம் சொல்லுகின்றார் . மீனா முத்துவுக்கு விஷயத்தை சொல்லாமல் க்ரிஷை உடனடியாக அழைத்து வருமாறு சொல்லுகின்றார்.
இதற்கிடையில், க்ரிஷின் ஸ்கூலுக்கு சென்ற சிந்தாமணி, மீனா தான் என்னை அனுப்பினார் என்று க்ரிஷை ரவுடிகளிடம் ஒப்படைக்கின்றார் . அவர்கள் சென்று கொண்டிருக்கும் வழியில் முத்துவின் கார் குறுக்கிடுகிறது.

இதன்போது ஏற்பட்ட தகராறில் உள்ளே இருந்த க்ரிஷ் முத்து அங்கிள் என்று கத்துகின்றார் . அதன்பின்பு அந்த ரவுடிகளை விரட்டிச் சென்று காரிலிருந்து க்ரிஷை காப்பாற்றுகின்றார் முத்து.
இதன் போது யார் இப்படி செய்யச் சொன்னது என்று கேட்க, அவர்கள் சிந்தாமணியை சொல்லிவிடுகின்றார்கள். இதுதான் இன்றைய எபிசோட் .
Listen News!