இந்தியாவின் பிரபல நடிகை சமந்தா டிசம்பர் முதலாம் தேதி பிரபல இயக்குநர் ராஜ் நிடிமோருவை தனது குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள லிங்க பைரவி திருக்கோயிலில் நடைபெற்றது.
நடிகை சமந்தா ஏற்கனவே 4000 கோடிக்கு சொந்தக்காரரான நாகார்ஜுனாவின் மூத்த மகனான நாக சைதன்யாவை 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். ஆனாலும் ஒரு சில ஆண்டுகளிலேயே அவர்களுடைய திருமணம் விவாகரத்தில் முடிந்தது.
இதைத் தொடர்ந்து நாக சைதன்யா கடந்த ஆண்டு சோபிதாவை திருமணம் செய்தார். இவர்களுடைய திருமணம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அந்த நேரத்தில் சமந்தா பலராலும் பரிதாபமாக பார்க்கப்பட்டார்.

இந்த நிலையில், கோவாவில் தனது இரண்டாவது கணவர் ராஜ் நிடி மோருடன் ஒரு நாள் ஹனிமூன் கொண்டாடியுள்ளார் சமந்தா. தற்போது இது தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

சமந்தாவுக்கு ரொம்பவும் பிடித்த இடங்களில் ஒன்றாக கோவா காணப்படுகிறது. இவர்கள் இருவருக்கும் பிப்ரவரி மாதம் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும் தகவல்கள் கசிந்தன. அதற்குப் பிறகு அவர்கள் இருவரும் டேட்டிங் செய்யும் போட்டோக்கள் வெளியாகி வைரல் ஆகின.
இவ்வாறான நிலையில், தற்போது நடிகை சமந்தா கோவாவில் தனது ஹனிமூனை கொண்டாடி வருவதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பான புகைப்படங்கள் இனி தான் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!