விஜய் டிவியில் சீரியல், நடனம், பாடல், காமெடி, கேம் ஷோ என பல கான்செப்ட்களுடன் ஏகப்பட்ட ஹிட் ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஹிட் சீரியல்கள் என்றால் சிறகடிக்க ஆசை, சின்ன மருமகள், பாண்டியன் ஸ்டோர் 2, அய்யனார் துணை, மகாநதி என பல சீரியல்களை கூறிக் கொண்டே போகலாம்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகும் சுட்டும் விழி சுடரே என்ற சீரியலில் புதிய ப்ரோமோ வெளியாகி இருந்தது. அதில் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்த வினுஜா நடிக்கின்றார்.

இந்த சீரியல் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. அதற்குள் மற்றும் ஒரு புதிய சீரியல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. அந்த சீரியலில் செல்லம்மா சீரியல் புகழ் அன்ஷிதாவும், தமிழும் சரஸ்வதியும் சீரியல் புகழ் நக்ஷத்ராவும் இணைந்து அழகே அழகு என்ற சீரியலில் நடிக்கிறார்கள்.
தற்போது இந்த ப்ரோமோ வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழும் சரஸ்வதியும் சீரியல் புகழ் நடிகை நக்ஷத்ரா இந்த சீரியலில் நடிக்க கமிட் ஆகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!