தமிழ் திரையுலகில் நடிகர் விஜயகாந்த் என்ற பெயரைக் கேட்டவுடனே, மக்கள் மனதில் அவரது மனிதாபிமானம் தான் நினைவுக்கு வரும். அரசியல், சினிமா, பொதுவாழ்வு என எந்த துறையிலும் அவர் நடந்து கொண்ட விதம், பலருக்கும் இன்று வரை ஒரு முன்மாதிரியாகவே இருக்கிறது.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் பல படங்களில் சண்டை இயக்குநராக பணியாற்றிய ஜாக்குவார் தங்கம் விஜயகாந்தின் சமூக சேவை பற்றி பேசியுள்ளார். அவர் கூறியதாவது, "சாலி கிராமத்தில் இலவச ஹாஸ்பிடல் ஒன்று திறந்து வைத்திருந்தார் நடிகர் விஜயகாந்த்.
அங்க டாக்டர் பீஸ் இல்ல. மருந்து பிரீ, இல்லம் பிரீ. அந்த ஹாஸ்பிடலுக்கு ஞாயிற்றுக்கிழமை கரெக்ட்டா வந்திடுவாரு. அங்க ஒக்காந்து 1000, 2000, 1 லட்சம்னு செக் எழுதுவார். எதுக்குன்னு பார்த்தால் படிக்க முடியாத ஏழை பசங்களுக்கு காசு அனுப்புவார்.” என்று தெரிவித்தார்.

இந்த மருத்துவமனை, கிராமப்புற மக்களுக்கு மிக முக்கியமான ஆதரவு வழங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.அத்துடன் இந்தக் கருத்துகள் மூலம் விஜயகாந்த், திரையுலகில் மட்டுமல்ல, சமூக சேவையிலும் முன்னணியில் விளங்கியுள்ளார் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
Listen News!