• Apr 17 2026

ஜனநாயகன் ஆடியோ லான்ச்சுக்கு சென்ற விஜயின் பெற்றோர்! வைரல் போட்டோஸ்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

விஜய் நடிப்பில் வெளியாக உள்ள ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்றைய தினம் மலேசியாவின் தலைநகர் கோலாப்பூரில் நடக்க உள்ளது. இதையொட்டி விஜய் உட்பட படக்குழுவினரும், சிறப்பு விருந்தினர்களும் நேற்று அங்கு சென்று விட்டார்கள். 

விஜய் நடித்த ஜனநாயகன் படத்தை எச். வினோத்    இயக்கியுள்ளார்.அந்த படத்தில் விஜயுடன் பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ்ராஜ் என பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். 

ஜனநாயகன் படம் விஜயின் கடைசி படம் என்று சொல்லப்பட்டிருப்பதால் இதனை கொண்டாடுவதற்காக விஜயின் ரசிகர்கள்  மிகுந்த உற்சாகத்தில் தயாராக இருக்கின்றார்கள். படத்தின் ரிலீஸுக்கு எவ்வளவு  ஹைப் இருக்கிறதோ அதேபோல இசை வெளியீட்டு விழாவுக்கும் இருக்கும். 


விஜய் சினிமாவில் மட்டுமில்லாமல் அரசியலிலும் களமிறங்கியதால் இம்முறை தமிழ்நாட்டில் இசை வெளியீட்டு விழாவை நடத்தினால் பிரச்சனைகள் வரலாம் என்ற காரணத்தினால் மலேசியாவின் தலைநகர் கோலம்பூரில்  உள்ள ஸ்டேடியம் ஒன்றில் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா நடக்கிறது. 


இந்த நிலையில், ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்காக விஜயின் பெற்றோர்கள் சென்ற காட்சி தற்போது வைரலாகி வருகின்றது. மேலும் இதில் கலந்து கொள்வதற்காக  அனிருத், அட்லி, பூஜா ஹெக்டே, நாசர்  போன்ற பல நடிகர்கள் சென்று உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

 


Advertisement

Advertisement