• Jan 19 2025

மீனா வீட்டில் நடந்த பிரச்சினை.. உள்ளாடையுடன் வீட்டை விட்டு கிளம்பிய முத்து?

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதில், முத்துவின் பாட்டி கல்யாண நாளை முன்னிட்டு வீட்டுக்கு வருகிறார். இதன் போது சந்தோஷத்தில் எல்லாரும் இருக்க விஜயா மட்டும் அதிர்ச்சியில் இருக்கிறார். திருமண நாளை முன்னிட்டு முத்து மீனாவுக்கு மோதிரம் அணிவிக்கின்றார். இதன் போது இருவரையும் ஆசீர்வாதம் பண்ணுமாறு பாட்டி விஜயாவுக்கு  சொல்லுகிறார். மேலும் மீனாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்குமாறும் சொல்ல, அவரும் வேறு வழியின்றி கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கிறார்.

அதன் பிறகு, முத்துவும் மீனாவும் மீனாவின் அம்மா வீட்டுக்கு கிளம்பிச் செல்ல, அங்கு மீனாவின் அயல் வீட்டார்கள் அவர்கள் இருவரையும் பார்த்து திருமண நாளுக்கு வாழ்த்துக்களை சொல்லியது மட்டுமில்லாமல், முத்து ரொம்ப மாறிட்டார் என பாராட்டுகிறார்கள். பிறகு உள்ளே சென்ற முத்து மீனாவின் அப்பா படத்தை கும்பிட்டு விட்டு இருக்க, அவருக்கு டீ போட்டு கொடுக்கின்றார்கள். 


இதன் போது ஷர்ட் பற்றி கதை வர, ஷர்ட்  நல்லா இருக்குது நான் கூட யோசித்தேன் சத்யா வாங்கி தந்தா நீங்க போடுவீங்களா  மாட்டீங்களா என்று மீனாவின் அம்மா உண்மையை உடைக்க, இது சத்யா வாங்கி தந்த ஷர்ட்டா? எனக்கு ஏன் சொல்ல இல்லை என்று ஷர்ட்டை கழட்டி விட்டு உள்ளாடையுடன் வீட்டை விட்டு கிளம்புகிறார் முத்து. மீனா எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. இதை பார்த்து அயலவர்கள் முத்து ஏன் ஷர்ட்  இல்லாமல் செல்கிறார்? இப்பொழுது தானே சந்தோஷமாக பார்த்தோம் என்று பேசுகிறார்கள்.

இதை அடுத்து முத்து கோவமாக காரில் வர மீனாவும் ஏறி செல்கிறார். போகும் வழியில் முத்து கடை ஒன்றுக்கு சென்று ஷர்ட் எடுக்க போக, அங்கு கடைக்காரர் தங்கள்மேல் எவ்வளவு நம்பிக்கை இருந்தால் இப்படி ஷர்ட்  இல்லாமல் வருவீங்க என்று அங்கு பணிபுரிபவர்களை அழைத்து முத்துவை காட்டி அவருடன் செல்பி எடுத்துக் கொள்கின்றார்கள்.

இறுதியாக முத்துவும் மீனாவும் வீட்டுக்கு வர, வேலை எல்லாம் செய்து விட்டு களைப்பிலிருந்த விஜயா, மீனாவின் அம்மா வீட்டுக்கு போன இவங்க ஏன் திடீரென வந்துட்டாங்க என யோசிக்கிறார். பாட்டியும் இப்பதானே போனீங்க எதற்காக வந்தீர்கள் என்று கேட்க முத்துவும் மீனாவும் வேறு வேறு பதில் சொல்கின்றார்கள், இதுதான் தற்போது வெளியான எபிசோட்.

Advertisement

Advertisement