• Jul 27 2024

விஜய் ஹீரோயினியை தட்டி தூக்கிய சூர்யா. இந்த படமாவது கைகொடுக்குமா?

Sivalingam / 2 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் படத்தில் நாயகியாக நடித்த நடிகையை சூர்யா தனது அடுத்த படத்தின் நாயகியாக்கி உள்ள நிலையில் இந்த படமாவது அந்த நடிகைக்கு கை கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தளபதி விஜய் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவான ’பீஸ்ட்’ படத்தில் நாயகியாக நடித்தவர் நடிகை பூஜா ஹெக்டே. இந்த படம் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை என்பது தெரிந்ததே. அதற்கு முன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் மிஷ்கின் இயக்கத்தில் உருவான ’முகமூடி’ திரைப்படத்தில் பூஜா ஹெக்டே நடித்தார் என்பதும் அந்த படமும் அவருக்கு தோல்விதான் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் பூஜா ஹெக்டே,  சூர்யா நடிக்க இருக்கும் 44வது படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. முதல் முறையாக சூர்யா மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இணையும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே இணைந்து உள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.



தமிழில் இரண்டு படங்கள் நடித்த பூஜா ஹெக்டேவுக்கு இரண்டுமே தோல்வி படங்களாக அமைந்த நிலையில் சூர்யாவுடன் நடிக்கும் படமாவது கை கொடுக்குமா? அதன் பின்னர் கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வருவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த நிலையில் ’சூரியா 44’ படத்தின் படப்பிடிப்பு ஜூன் முதல் வாரத்தில் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நடைபெற இருப்பதாகவும் 40 நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது மேலும் இந்த படத்தின் இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் படத்தில் ஐந்து பாடல்களை கம்போஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் அதற்கான பணிகளையும் அவர் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement