• Jan 19 2025

'அயலான்' படத்தின் பிரபலம் மருத்துவமனையில் அவசர அனுமதி! அதிர்ச்சியில் படக்குழுவினர்

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் அயலான். இது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் முற்றிலும் வித்தியாசமாக எடுக்கப்பட்ட படமாகும்.

ரவிக்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளதோடு, ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் மற்றும் பலர் உள்ளிட்ட திறமையான துணை நடிகர்களும் நடித்துள்ளார்கள்.  

வேற்றுக்கிரகவாசி கதைக்களத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட அயலான் திரைப்படம், மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியது.


எனினும், அயலான் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றதால், இதுவரை சுமார் 75 கோடி மட்டுமே வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அயலான் பட தயாரிப்பாளர் கே.ஜி.ஆர்.ராஜேஷ், திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.


அதாவது அயலான் பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான கே.ஜி.ஆர் நிறுவனத்தின், தலைவர் ராஜேஷ் திடீர் என ஏற்பட்ட உடல்நல பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள  ராஜேஷுக்கு, தற்போது வரை என்ன பிரச்சனை என்பது குறித்த எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement