விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், இந்த சீசனில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.
பிக்பாஸ் வீட்டில் பைனலுக்கான போட்டியில் எட்டு போட்டியாளர்கள் காணப்படும் நிலையில், ஏற்கனவே எலிமினேட் ஆகி வெளியேறிய எட்டு போட்டியாளர்களை மீண்டும் வீட்டிற்குள் அனுப்பி வைத்து ரணகளம் செய்து வருகின்றார் பிக்பாஸ்.
d_i_a
பிக்பாஸ் நாக் அவுட் சுற்றின் மூலம் எட்டு போட்டியாளர்கள் சென்றுள்ள நிலையில், இவர்களில் இருவர் ஃபைனலிஸ்ட் ஆக மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது. மேலும் 95 நாட்கள் பிக்பாஸில் விளையாடி வரும் போட்டியாளர்களில் ரயானைத் தவிர இருவர் வெளியேறவும் வாய்ப்பு உள்ளது. இதனால் தற்போது இந்த சீசன் சூடு பிடித்துள்ளது.
இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வாரத்தில் எலிமினேஷன் நடைபெறும் என்பதால் தற்போது டபுள் எவிக்ஷன் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் கசிந்து உள்ளன.
அதன்படி அதில் அருண் எலிமினேட் ஆகியுள்ளதாகவும் அவருடன் தீபக் எலிமினேட் ஆகி உள்ளதாகவும் கூறப்படுகின்றது. ஆனாலும் இது தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாக வில்லை.
இவ்வாறு அருணும் தீபக்கும் வெளியேறியிருந்தால் பிக்பாஸ் வீட்டில் சௌந்தர்யா, பவித்ரா, ஜாக்குலின் மற்றும் ரயான், விஷால், முத்துக்குமரன் ஆகிய போட்டியாளர்கள் மட்டுமே பைனலுக்களுக்கான தேர்வில் நுழைய உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!