• Dec 22 2024

மீனாவுக்கு மரண பீதியை கிளப்பிய லெட்டர்.. மீனா செய்த புண்ணியம்! விஜயாவுக்கு ஆப்பு உறுதி

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், விஜயா தனக்கு சாப்பாடு கொண்டு வர சொல்ல, மீனா தனக்கு பூ மாலை கட்ட வேண்டி இருக்கு என்று சொல்லுகிறார். அங்கு வந்த முத்துவும் அப்படி என்றால் மீனாவுக்கு சம்பளம் கொடுங்கள் என்று மாறி மாறி பேசிக் கொண்டிருக்க, அண்ணாமலை நான் வீட்டில் சும்மா தானே இருக்கேன் நானே கொண்டு வந்து தருகிறேன் என சொல்லுகின்றார்.

அதற்கும் விஜயா இப்ப உனக்கு சந்தோஷமா என்று மீனாவுக்கு திட்டுகின்றார். இறுதியில் மீனா நானே கொண்டு வந்து தருகின்றேன் என்று சொல்கின்றார். அதன் பின்பு அண்ணாமலைக்கும் ஸ்ருதிக்கும் சாப்பாடை பரிமாறுகின்றார். இதன் போது மீனா எல்லார் மேலயும் ரொம்ப அக்கறையா இருக்காங்க.. ஆனா ஏன் ஆன்டிக்கு பிடிக்க மாட்டேங்குது என அண்ணாமலையிடம் பேசிக் கொண்டிருக்கின்றார் ஸ்ருதி.

இன்னொரு பக்கம் மனோஜ் கடைக்கு வந்த நபர் ஒருவர் லெட்டர் ஒன்றை கொடுக்கின்றார். அதில் உன்னுடைய அம்மாவுக்கு மாரடைப்பு வந்து இறந்துவிடுவார். உன்னுடைய தம்பி கொலைகாரன் ஆவான். நீ தற்கொலை செய்து கொள்வாய் என்று எழுதப்பட்டுள்ளது.

அதன் பின்பு மனோஜ் லெட்டர் தந்தவரை தேடி சென்ற போது அவர் டீக்கடை ஒன்றில் மாட்டுப்படுகிறார். ஆனாலும் உண்மை தெரிய வேண்டும் என்றால் தான் குடித்த டீக்கு காசு கொடுக்குமாறு சொல்ல, அவரும் கொடுக்கிறார். அதன் பின்பு மீண்டும் அவர் எஸ்கேப் ஆகி விடுகின்றார். இதன் போது அங்கு இருந்தவர்கள் அவன் ஒரு திருடன் அவனிடம் அவதானமாக இருக்குமாறு சொல்லுகின்றார்கள்.


இதை தொடர்ந்து விஜயாவுக்கு சாப்பாடு கொண்டு செல்லும்போது வழியில் வயது முதிர்ந்த தம்பதி ஒன்று பசி மயக்கத்தில் இருப்பதை பார்த்து அவர்களுக்கு சாப்பாடை பரிமாறி விட்டு நைட்டுக்கும் நீங்க சாப்பிடாமல் இருக்க கூடாது என காசு கொடுத்து விட்டு வருகின்றார் மீனா.

அந்த நேரத்தில் விஜயாவும் போன் பண்ண அங்கதான் வந்து கொண்டிருக்கின்றேன் என சொல்லுகின்றார் . பரதநாட்டிய கிளாசில் சேர்ந்த காதல் ஜோடி குசியாக பரதம் பழகிக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் இன்றைய எபிசோடு.

Advertisement

Advertisement