விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ்-8 நிகழ்ச்சியின் இன்றைய நாள் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் விஜய் சேதுபதி போட்டியாளர் முத்துகுமரனுக்கு வார்னிக் கொடுப்பது போல சரவெடியாக பேசி இருக்கிறார். என்ன நடந்தது என்பது குறித்து பார்ப்போம்.
பிக் பாஸ் போட்டியாளர்கள் விட்டுக்கொடுத்து விளையாடுகிறார்கள் என கோபமடைந்த பிக் பாஸ் பிரீபாசை ரத்து செய்தார். பின்னர் தவறையுணர்ந்த போட்டியாளர்கள் மன்னிப்பு கேட்டார்கள். இந்நிலையில் இன்றைய நாள் ப்ரோமோவில் விஜய் சேதுபதி முத்துவை பார்த்து "பிக் பாஸ் கொடுத்த ரூல்ஸையும், டாஸ்க்கையும் கெடுக்குறது, பார்க்குறவங்களுக்கு சுவாரஷ்யத்தை குறைக்கிறது தான் தப்பு" என்று கூறுகிறார். உடனே முத்து "நான் செஞ்சது தப்பு, நான் தான் ரெஸ்பான்சிபல்" என்று கூறுகிறார்.
மேலும் பேசிய விஜய் சேதுபதி "பவித்ரா, ஜேக்குலிங்காக விட்டுக்கொடுத்து விளையாடுறீங்க, இப்படி விட்டுக்கொடுத்தால் நீங்க எப்ப கேம் விளையாட போறீங்க? நாங்க யாருக்கும் உங்களை விட்டு கொடுக்க சொல்லவில்லை, தியாகம் பண்ண சொல்லவில்லை அப்படி செய்யாதீர்கள். நேற்று பிக் பாஸ் கொடுத்த பனிஷ்மென்ட் நீங்க பண்ணுன தப்புக்காக இல்லை எல்லாரும் செய்த தப்புக்காகத்தான்" என்று வார்னிக் செய்தார் விஜய் சேதுபதி.
Listen News!