பிரபல நடிகர் விக்ரம் தற்போது இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சாமி-2 திரைப்படத்தின் தயாரிப்பாளர் இதன் ரிலீசுக்கு பிரச்சினை ஏற்படுத்துவதாக வலைப்பேச்சு செய்தியாளர் கூறியுள்ளார்.
சித்தா படம் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் அருண்குமார், வீர தீர சூரன் படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் சியான் விக்ரம் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் விக்ரமுடன் சேர்ந்து முக்கிய கதாபாத்திரத்தில் துஷாரா விஜயன், எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்துக்கு இவ்வாறு ஒரு பிரச்சினை இருக்கிறது என வலைப்பேச்சி செய்தியாளர் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில் "வீர தீர சூரன் திரைப்படம் ஜனவரி 24 ரிலீசாகும் என் பிளான் பண்ணி சைலண்டாக வேலைகள் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் தான் விக்ரம் வைத்து சாமி-2 திரைப்படத்தினை எடுத்தார் அது படு தோல்வி அடைந்தது. இந் நிலையில் அதுக்கு தரவேண்டிய கணக்கை கொடுங்க அதவச்சி தான் அடுத்த வேலைகளை செய்யவேண்டும் என்று தயாரிப்பாளர் சொல்ல அதற்கு விக்ரம் தர மறுத்து இருக்காரு.
அந்த பிரச்சினை அப்படியே போக தற்போது பெரிய படமான வீர தீர சூரன் ரிலீஸ் நேரத்தில் அந்த 6லட்சம் தருமாறு கேட்க இருப்பதாக தகவல் வந்து இருக்கு. என்னைக்கோ உள்ள அந்த பஞ்சாயத்தை இப்ப இழுத்துக்கொண்டு வாரது படத்துக்கு பின்னடைவை கொடுக்குமோனு ஒரு எண்ணமும் இருக்கு" என்று கூறியுள்ளார்.
Listen News!