• Oct 13 2024

பாக்கியாவுக்கு எதிராக கோபி எடுத்த சபதம்.. துடிதுடித்து போன ஈஸ்வரி?

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், பாக்கியா  ராமமூர்த்திக்கு உரிய சடங்குகள் எல்லாவற்றையும் செய்து இறுதியில் வீட்டிற்கு வருகின்றார். ஈஸ்வரி எல்லாம் முடிந்ததா என கேட்டு அழுகின்றார்.

மறுபக்கம் கோபி தான் இந்த நிலைமைக்கு இருக்க பாக்கியா தான்  காரணம். என்னால் ஒரு சடங்கையும் செய்ய முடியவில்லை நாளைக்கு நான் எல்லார்ட மூஞ்சிலயும் எப்படி முழிப்பேன். எனக்கு ஒரே எதிரி  அது பாக்கியா தான். அவளை சும்மா விடமாட்டேன் என ராதிகாவிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.


இதை தொடர்ந்து பாக்யா செல்வியை வீட்டுக்கு போயிட்டு வருமாறு சொல்லவும் ,செல்வி இல்லை என மறுக்கின்றார். அத்துடன் ஈஸ்வரி தான் கல்யாணம் கட்டியதில் இருந்து இப்போது வரை ராமமூர்த்தி தன்னை பார்த்துக் கொண்ட விதம், தான் வருத்தத்தில் இருந்தபோது கவனித்துக் கொண்ட விதம் அத்தனையையும் சொல்லி கவலைப்படுகின்றார்.

இன்னொரு பக்கம் இனியா தாத்தாவை நினைத்து அழுது கொண்டிருக்கும் போது அவரை எல்லோரும் சமாதானப்படுத்துகின்றார்கள். அதன் பின்பு இன்றைக்கு எல்லாரும் ஒன்றாகவே தூங்குவோம் என ஹாலில் தூங்குவதற்கு ஆயத்தம் ஆகின்றார்கள் இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement