• Jan 18 2025

தல அஜித்துடன் கூட்டணி சேரவுள்ள அடுத்த இயக்குநர் யார் தெரியுமா..?

Mathumitha / 3 weeks ago

Advertisement

Listen News!

கார் பந்தயங்கள் மற்றும் சினிமாவில் மிகவும் பிஸியாக இருக்கும் நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி,குட் பாட் அக்லி போன்ற திரைப்படங்களில் போட்டி போட்டு நடித்து வருகின்றார்.பொங்கலுக்கு அஜித் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமையவுள்ளது இவ் இரு படங்களில் எது என்ற குழப்பம் ஒரு புறம் இருக்க தற்போது அஜித்தின் அடுத்த திரைப்படம் தொடர்பான தகவல்கள் சில கசிந்த வண்ணம் உள்ளன.


இவரது தற்போதைய திரைப்படங்களுக்காக தனது உடல் எடையினை குறைத்து செம மாஸ் காட்டிவரும் தல தனது அடுத்த படத்தில் சிறுத்தை சிவா அல்லது வெங்கட் பிரபுவுடன் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது அதிலும் சமீபத்தில் ஏற்பட்ட டுவிட் விவகாரத்தின் காரணமாக அஜித் மற்றும் வெங்கட் பிரபு அதிகம் பேசிக்கொள்வதில்லை இருப்பினும் தற்போது இவர்கள் பேச ஆரம்பித்துள்ளதாகவும் அஜித் அடுத்த படத்தில் இவருடன் கூட்டு சேர்வதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக சொல்லப்படுகின்றது.

இருப்பினும் இதுவரை எதுவித அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை ஆனால் அஜித் ரசிகர்கள் சிறுத்தை சிவாவுடன் இணைவதை விரும்பவில்லை ஆகவே இவர் குறித்த வேண்டுகோளினை ஏற்று நடப்பாரா இல்லையா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement

Advertisement