நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா விஜயகுமார் தற்போது ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் போஸ்டரை அவரது மகள் ஜோவிகா தனது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.
நடிகை வனிதா தனது மகள் ஜோவிகா விஜயகுமார் தயாரித்துள்ள படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை வனிதா விஜயகுமார் அவரே இயக்கி நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிகர் ராபர்ட் மாஸ்டர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 'மிஸ்ஸஸ் & மிஸ்டர்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் வனிதா ராபர்ட் மாஸ்டர் மீது சாய்ந்திருப்பதுபோல அந்த போஸ்டர் வெளியாகியுள்ளது.
ரொமான்ஸ் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் போஸ்டரை வனிதாவின் மகளான ஜோவிகா விஜயகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது தற்போது ரசிகர்களிடத்தே வைரலாகி வருகிறது.
Listen News!