பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகிய புஷ்பா 2 படத்தின் முதல் காட்சியின்போது ஏற்பட்ட கூட்டநெரிசல் காரணமாக புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் காட்சியில் ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.குறித்த சம்பவம் தொடர்பில் செய்தியாளர்களை சந்தித்து நடிகர் விளக்கம் அளித்துள்ளார்.
அதாவது குறித்த சம்பவம் தொடர்பில் நான் எந்தவித தவறும் இழைக்கவில்லை "அது மிகவும் எதிர்பாராத விதமாக நடந்த ஒரு துயரச் சம்பவம்.இதற்கு யாரையும் குறை சொல்ல முடியாது.என் படத்தை அனைவரும் கொண்டாடியபோது நான் மிகவும் சோகத்தில் இருந்தேன்" என மிகவும் மனவருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விவகாரம் தொடர்பில் கடந்த வாரத்தில் போலீசார் இவரை கைது செய்து 14 நாட்கள் சிறை தண்டனை விதித்திருந்த போதிலும் இவர் இடைக்கால ஜாமினில் தற்போது வெளியில் வந்துள்ளார்.இந்த சம்பவத்தினை தொடர்ந்து மக்களிற்கு ஒரு தெளிவினை வழங்கும் முகமாக குறித்த சந்திப்பினை ஒழுங்குபடுத்தியுள்ளதாக தெரியப்பட்டுள்ளது.
Listen News!