பான் இந்தியா திரைப்படமாக வெளியாகியுள்ளது ஜீப்ரா திரைப்படம். தெலுங்கில் தயாரிக்கப்பட்டு பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி இருக்கும் இந்த ஜீப்ரா திரைப்படம் பெரிய ஹீரோ வில்லன்கள் நடிகர்களை தாண்டி கன்டன்ட்டை மட்டுமே நம்பி வெளியாகியிருக்கிறது. இந்த படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.
ஹீரோ சூர்யா ஒரு பேங்-ல் உயர் பதவியில் இருக்கிறார், அப்போது அவருடைய காதலி ப்ரியா பவானி ஷங்கர் ஒரு சிறு தவறால் வேறு ஒருவரின் அக்கவுண்டிற்கு பணத்தை அனுப்புகிறார். இதனால் உண்மையான அக்கவுண்ட்க்கு போக வேண்டிய 4 லட்சத்த ஹீரோ தன் சாமர்த்தியத்தால் மீண்டும் பெற்று ப்ரியா பவானி ஷங்கரை காப்பாற்றுகிறார்.
இந்த சிக்கலில் இருந்து தப்பித்த நாயகன் சத்யதேவ், தான் போட்ட தகடு திட்டத்தால் வேறு ஒரு பெரிய பண பிரச்சனை சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். வில்லன் தாலி தனஞ்செயாவின் மிகப்பெரிய கோடிக்கணக்கான பணம் ஒன்று மாறி மாறி வேறு வேறு அக்கவுண்டுகளுக்கு நாயகன் பெயரில் பணப்பரிமாற்றம் நடந்து விடுகிறது. அந்த பணத்தை நான்கு நாட்களில் மீட்டுக் கொடுக்க வேண்டும் என வில்லன் ஹீரோவுக்கு கெடு வைக்கிறார்.
மாத சம்பளம் வாங்கும் நாயகன் அவ்ளோ பெரிய தொகையை வில்லனுக்கு திருப்பி கொடுத்தாரா? இல்லையா? வில்லனுக்கும் நாயகனுக்குமான இந்த பண ரேஸில் யார் ஜெயித்தார்கள்? இதுவே இப்படத்தின் மீதி கதை. முதல் ஏழு நாட்கள் விமர்சனம் செய்யக்கூடாது என்ற தேவையில்லாத விஷயங்களை எல்லாம் விட்டுவிட்டு கதைக்கும், கதாபாத்திரத்திற்கும், திரைக்கதைக்கும் முக்கியத்துவம் கொடுத்து படத்தை எடுத்தாலே தேவை இல்லாத மற்ற விஷயங்கள் எதுவும் அந்தப் படத்தை தொந்தரவு செய்யாது. அதுபோலவே இந்த படமும் அமைந்துள்ளது.
Listen News!