பிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி செய்தியாளர்களிடம் "நடிகர் எஸ். ஏ.சந்திரசேகர் இனி சரி வீட்டுல இருக்கணும், ரிலேக்ஸ் பண்ணனும் என்று நினைக்காம இன்னும் படத்தில் நடிக்கிறார்" என்று கூறியுள்ளார். இந்த விடையம் தற்போது வைரலாகி வருகிறது.
சமீபத்தில் கூரன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஜய் ஆண்டனி நடிகர் விஜயின் தந்தை எஸ். ஏ.சந்திரசேகர் பற்றி இவ்வாறு கூறியுள்ளார். அதாவது " வயசாகிருச்சி வீட்டுல இருப்போம்,ரெஸ்ட் எடுப்போம் என்று இல்லாம இன்னமும் உழைக்க வேண்டும் என்று படங்களில் நடிக்கிறார். நான் நினைக்கிறேன் எப்படியும் அவருக்கு 75 வயது சரி இருக்கும். இன்னும் அவர் ஆக்டிவா இருக்கார் என்று சந்தோசமாக உள்ளது" என்று கூறினார்.
மேலும் பேசிய இவர் "அவர் நடித்த கூரன் படம் பார்த்தோம் நல்லா இருக்கு, மிருகங்களுக்கும் உணர்வுகள் இருக்கு என்பதை அழகா எடுத்து காட்டி இருக்காங்க. கண்டிப்பா புலு குரோஸ்ல இருக்குறவங்க, அனிமல் லவர்ஸ் எல்லாருக்கும் இந்த படம் பிடிக்கும். வித்தியாசமான நல்ல கருத்து இந்த படத்துல சொல்லி இருக்குறாங்க. எல்லோரும் படம் பாருங்க" என்று கூறிய வீடியோ இணையத்தில் வலம் வருகிறது.
Listen News!