• Apr 14 2026

வாய் பிளந்து பார்ப்பார்கள்! அடித்து விடும் சூர்யா! கைகொடுக்குமா கங்குவா!

shali / 1 year ago

Advertisement

Listen News!

சினிமா திரையுலகின் முன்னணி நடிகர் சூர்யா தற்போது தான் நடித்த  கங்குவா திரைப்படத்தின் பிரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். கங்குவா இன்னும் இரண்டு வாரங்களில் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாக உள்ளது. ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால், படத்தை விளம்பரப்படுத்தும் பணியில், படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.


சிறுத்தை சிவா இயக்கிய இந்த திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பாட்னி, பாபி தியோல் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.  ஏற்கனவே இப்படத்தில் இருந்து பாடல்கள், போஸ்டர்கள் வெளியாகி இருந்தது. அவரை ரசிகர்களை கவர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

"d_i_a 


இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சூர்யா, "எங்கள் குழு உறுப்பினர்கள் யாரும் இதுபோன்ற ஒரு படத்தில் இதற்கு முன்பு பணியாற்றவில்லை, இது மிகவும் தனித்துவமானது,  கங்குவா திரைப்படத்தினை வாய் பிளந்து பார்ப்பார்கள். இப்படி ஒரு படம் எடுக்க முடியுமா என்று தோணும், வருகிற 14 ரிலீசாகும் போது இரட்டை தீபாவளியாக இருக்கும் என்று கூறியுள்ளார். கங்குவா திரைப்படத்தின் வருகைக்காக ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.  



Advertisement

Advertisement