சமீபத்தில் தமிழ் திரையுலகில் அதிகமாக பிரபலங்களின் விவாகரத்து செய்திகள் பரவி வருகின்றன. இதில், ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இடையிலான விவாகரத்து செய்தி ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.இந்த செய்தி வெளியாகியவுடன் பல சர்ச்சைகள் எழுந்தன. இருப்பினும் ஜெயம் ரவி தனது சொந்த வாழ்க்கை குறித்து பொதுவெளியில் பேச விரும்பவில்லை
இவர்கள் இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்திருந்தனர் இருப்பினும் நீதிமன்றம் இருவரையும் மனமுவந்து பேசுமாறு அறிவுரை வழங்கியது. இதற்குப் பிறகு இருவரும் நீதிமன்றத்தில் ஆஜரான போது சமாதான பேச்சு வார்த்தை தோல்வியடைந்தது.
இந்த நிலையில் இன்று இருவருக்கும் இடையில் சமரச பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு தற்போது அது பயனின்றி முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது நீதிமன்றம் இந்த விவாகரத்து வழக்கின் விசாரணை ஜனவரி 18 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Listen News!