2023 ஆம் ஆண்டு வெளியாகிய ஜெயிலர் திரைப்படத்தின் பாகம் இரண்டினை தயாரிக்கும் பணிகளை நெல்சன் தொடங்கியுள்ளார்.ரஜினி கூலி திரைப்படத்தில் மிகவும் பிஸியாக நடித்து வருகின்றார்.தற்போது ஜெயிலர் திரைப்படத்திற்கான ப்ரோமோ கடந்த 12 ஆம் திகதி ரஜினிகாந்தின் பிறந்தநாளினை முன்னிட்டு வெளியாகும் என அனைவரும் எதிர்பாத்திருந்தனர்.
இருப்பினும் அதற்கான சூட்டிங் தவிர்க்க முடியாத காரணங்களின் எடுக்காமையினால் படக்குழு வெளியிட தற்போது தாமதமாகியுள்ளது.இந்நிலையில் தற்போது இயக்குநர் குறித்த ப்ரோமோ காட்சியினை 2 நாட்களில் எடுத்து முடித்துள்ளதுடன் பொங்கலினை முன்னிட்டு இவ் வீடியோவினை படக்குழு வெளியிடலாம் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இரண்டு நாட்களில் அவசரமாக எடுக்கப்பட்ட இவ் வீடியோ எப்படி அமையும் மற்றும் இந்த பொங்கல் ரஜினி ரசிகர்களுக்கு விருந்தாக அமையுமா இல்லையா என பொறுத்திருந்து பார்க்கலாம்.
Listen News!