• Sep 18 2024

மரகத நாணயம், ராட்சசன் பட தயாரிப்பாளர் திடீர் மரணம்! பெரும் அதிர்ச்சியில் தமிழ்த் திரையுலகினர்

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 2015 ஆம் ஆண்டு வெளியான உறுமீன் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர்தான் ஜி. டில்லி பாபு. இதைத்தொடர்ந்து மரகத நாணயம், இரவுக்கு ஆயிரம் கண்கள், ராட்சசன், ஓ மை கடவுளே, பேச்சிலர்  மற்றும் கள்வன் உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார்.

இந்த படங்களில் மரகத நாணயம், ராட்சசன், ஓ மை கடவுளே, பேச்சிலர் ஆகிய படங்கள்  ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி படங்கள் ஆகின.

இதைத்தொடர்ந்து தொடர்ச்சியாக படங்களை தயாரிப்பதற்கு பல்வேறு இளம் இயக்குனர்களுக்கு முன் தொகை கொடுத்து ஒப்பந்தமும் செய்துள்ளார். தனது மகனை நாயகனாக்க வேண்டும் என்பது இவருடைய கனவு. அதன்படி வளையம் என்ற பெயரில் தனது மகன் நடிக்க  ஒரு படத்தினையும் தயாரித்து வந்தார்.


இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை எடுத்து வந்த டில்லி பாபு இன்றைய தினம் அதிகாலை காலமாகியுள்ளார். இவருடைய மறைவு திரையுலகப் பிரபலங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது பலரும் இவருடைய மறைவுக்கு இரங்கலை தெரிவித்து வருகின்றார்கள்.

இதேவேளை, இவர் பல புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களை முன்னணி இயக்குனர்களாக மாற்றிய ஆக்சிஸ் பிலிம் ஃபேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement