பிரபல நடிகர் ஆர்யா தனது ரசிகர்களுக்கு ‘சார்பட்டா 2’ திரைப்படம் ஷூட்டிங் தொடர்பான அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் ஆர்யா, ஜான் கோக்கன், நடிகை துஷாரா விஜயன், பசுபதி உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான திரைப்படம் தான் சார்பட்டா. இதன் முதல் பாகம் விமர்சம் மற்றும் வசூல் ரீதியில் வெற்றி அடைந்தது. இதனை அடுத்து இயக்குநர் பா. ரஞ்சித் சார்பட்டா பாகம் 2 குறித்து சமீபத்தில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த நடிகர் ஆரியா "2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சார்பட்டா 2 படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது, இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறியுள்ளார்". இதனை கேட்ட ரசிகர்கள் குஷியில் இருக்கிறார்கள். மேலும் படத்தின் அடுத்தகட்ட அப்டேட்காக காத்திருக்கிறார்கள்.
Listen News!