விடுதலை 2 படத்தில் மகாலட்சுமி கதாபாத்திரத்தை வழங்கிய இயக்குநர் வெற்றிமாறனுக்கு நன்றி கூறி புகைப்படங்களுடன் டுவிட் செய்துள்ளார் நடிகை மஞ்சு வாரியர். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நேற்று வெளியான 'விடுதலை-2' திரைப்படம் ரசிகர்களிடத்தே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க அவருடன் இணைந்து விஜய் சேதுபதி , மஞ்சுவாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
விடுதலை-2வில் நடிகை மஞ்சு வாரியர் வரும் காட்ச்சிகளை அவரின் ரசிகர்கள் கொண்டாடுகின்றார்கள். இந்நிலையில் நடிகை மஞ்சு வாரியர் தனது டுவிட்டர் பக்கத்தில் படப்பிடிப்பு நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் ஷேர் செய்துள்ளார். மேலும் "மகாலட்சுமி கதாபாத்திரத்தை வழங்கியதற்கு நன்றி வெற்றிமாறன் சார்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
Thank you #VetriMaaran Sir for Mahalakshmi ❤️ #ViduthalaiPart2 in cinemas now! pic.twitter.com/kWl7uaai6z
Listen News!