• Dec 22 2024

ஆண்ட்ரியாவுக்கு சப்ரைஸ் கொடுத்த பிசாசு2 படக்குழு..!

Mathumitha / 10 hours ago

Advertisement

Listen News!

பிரபல பாடகியும் கதாநாயகியாகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கும்  ஆண்ட்ரியா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.இந்த சிறப்பு நாளை முன்னிட்டு அவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படமான பிசாசு-2 படக்குழு, ஆண்ட்ரியாவுக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது.


இத்திரைப்படமானது மிகவும் எதிர்பார்ப்புடன் உருவாகி வருகின்றது இப் படத்தில் ஆண்ட்ரியா மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடித்து வருகின்றனர் மிஸ்கின் இயக்கியுள்ள இப்படம் ஒரு உணர்ச்சி கலந்த ஹாரர் திரைப்படமாகும்.


பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் இந்த போஸ்டர் படத்தின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. போஸ்டரில் ஆண்ட்ரியாவின் கவர்ச்சிகரமான காட்சி ரசிகர்களை கவர்ந்துள்ளதுடன் மேலும் இப்படமானது அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement