பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் ஆரம்பிக்கப்பட்டு இன்றையோடு 77 நாட்களைக் கடந்து உள்ளது. இதன்போது முதலாவது ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.
அதில் விஜய் சேதுபதி அன்ஷிதா, விஷாலை ரோஸ்ட் செய்துள்ளார். இது ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டமாக அமைந்துள்ளது.
விஷாலின் அன்பான கேப்டன்சி எப்படி இருந்தது என்று விஜய் சேதுபதி வினாவுகின்றார். அதற்கு சௌந்தர்யா அன்சிதா மேலே இருக்கிற பாசத்துல மற்ற எல்லார் மீதும் கத்துற மாதிரி ஆகிவிட்டது என்று சொல்கின்றார்.
இதை தொடர்ந்து பவித்ராவும் அன்ஷிதாவுக்கு சப்போர்ட் பண்ணுறீங்க என்று சொல்ல அவர் ஏற்றுக் கொள்ளவில்லை என சொல்லுகிறார்.
ஜாக்குலினும், அவரை யார் எல்லாம் கேப்டன் ஆக்கணும் என்று நினைச்சாங்களோ அவங்களை தான் அன்பா பாக்கணும் என விஷால் முயற்சி செய்ததாக குறிப்பிட்டார்.
இதை எல்லாம் கேட்ட விஜய் சேதுபதி, இதற்கு எல்லாம் உங்க கிட்ட பதில் இருக்கா என விஷாலிடம் கேட்கிறார். இதனால் அன்ஷிதாவும் விஷாலும் பதில் சொல்ல முடியாமல் திணறும் ப்ரோமோ தற்போது வைரலாகி உள்ளது.
Listen News!