தற்போது விடாமுயற்ச்சி,சூர்யா 45 போன்ற படங்களில் மிகவும் பிஸியாக நடித்து வரும் நடிகை திரிஷா சமீபத்தில் 22 ஆவது திரைப்பயண நிறைவை படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது நடிகை திரிஷா மற்றும் விஜய் அவர்களுடன் சில கிசு கிசுக்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பி வருகின்றது.பிரபல நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணத்திற்கு இருவரும் ஜோடி போட்டு சென்றது குறித்து அனைவராலும் திரிஷாவிற்கு விஜய் மேல் காதல் என சில வதந்திகளை பரப்பி வருகின்றனர்.
தற்போது நடிகை அவர்கள் தனது சமூக வலைத்தளங்களில் அழகிய வெள்ளை ஆடையுடன் புகைப்படங்களை பகிர்ந்து மாத்திரமின்றி குறித்த பதிவில் "அமைதி.. பொறுமை.. நம்பிக்கை.."என குறிப்பிட்டுள்ளார்.இதற்கு பலரும் பலவிதமாக கமெண்ட் செய்து வருவதுடன் குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.புகைப்படங்கள் இதோ..
Listen News!