• Nov 23 2025

சூடு பிடித்த ஜாய் விவகாரம்; மாதம்பட்டி போட்ட முட்டுக்கட்டை.. ஒர்க் அவுட் ஆகுமா?

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ்நாட்டின் பிரபல சமையல் கலைஞரான  மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவதாக ஜாய் கிரிசில்டாவை திருமணம் செய்தார்.  இது மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி பேசு பொருளாக மாறி உள்ளது.  

இவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலேயே இரண்டாவது திருமணம் செய்தார்.  தற்போது அவர் கர்ப்பமாக இருக்கும் நிலையில், மாதம் பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றியதாக  புகார் கொடுத்துள்ளார்.  இதனால் அடுத்தடுத்து பல பிரச்சனைகள் உருவாகியுள்ளன. 

அதன் பின்பு கமிஷனர் அலுவலகத்தில் ஜாய் புகார் அளித்தார். பல ஊடகங்களுக்கும் பேட்டி கொடுத்தார்.  பல பிரபலங்களை டேக் செய்து எனக்கு நியாயம் வாங்கி கொடுங்கள் என்று பதிவிட்டிருந்தார்.  அதன் பின்பு  மாதம்பட்டி  ஜாய் மீது வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணையும் நடைபெற்று வருகின்றது.


இந்த நிலையில்,  மாதம்பட்டி ரங்கராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  ஜாய் கிரிசில்டா நினைப்பது நடக்காது,  இந்த பிரச்சனையை சட்ட ரீதியாக நாடுவேன்  என்று  அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.  இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது .

ஆனால் அதற்கு பின்பு  என்ன கதை விடுறான் பாருங்க என்று  ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டா பக்கத்தில்  தெரிவித்து இருந்தார். மேலும் சட்டம் தன் கடமையை செய்யும்  நீங்க  விசாரணைக்கு ஆஜராக பாருங்கள் என்பது போல போஸ்ட் ஒன்றையும் பகிர்ந்து இருந்தார்.  தற்போது இந்த விவகாரம் மேலும் சூடு பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement