விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் சர்ச்சைகளுக்காகவே அதிகம் பேசப்பட்டு வருகின்றது. இதனால் சமூக வலைத்தளங்களில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளன.
இந்த பரபரப்புக்கு மத்தியில் ஒரே வாரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி இருந்து எலிமினேட் ஆன இயக்குநரும் நடிகரும் ஆன பிரவீன் காந்தி பிக் பாஸ் தொடர்பில் பேசி இருக்கும் தகவல்கள் மேலும் சர்ச்சை ஏற்படுத்தி வருகின்றன.
ரட்சசன், ஜோடி போன்ற படங்களை இயக்கி பிரபலமானவர் பிரவீன் காந்தி. இவர் ஒரு படத்திலும் கதாநாயகனாக நடித்தார். ஆனால் அது தோல்வியை தழுவியது. அதன் பின்பு தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்தார். எனினும் ஒரே வாரத்தில் இவர் எலிமினேட் ஆனது அதிர்ச்சியை கொடுத்தது .
இந்த நிலையில், பிரவீன் காந்தி தனியார் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தனது வெளியேற்றம் தொடர்பிலும் பிக் பாஸ் தொடர்பிலும் கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

அதன்படி அவர் கூறுகையில், நான் வாய்ப்பை தவற விட்டுட்டேன் என்று பலர் நினைக்கலாம். ஆனால் என்ன எழுதப்பட்டிருக்கோ அதுதான் நடந்தது. நான் நிகழ்ச்சிக்கு வர வேண்டும், ஒரே வாரத்தில் வெளியேற வேண்டும், போகும்போது விஜய் சேதுபதியிடம் நான் ஸ்பேஸ் என்று சொன்னது அனைத்துமே எழுதப்பட்டது.

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றால் கூத்தாடிகள் இருக்கும் இடம், பொழுதுபோக்கு நிகழ்ச்சி, ஆனால் இதில் பாதி ஸ்கிரிப்ட் தான். இதை நான் உள்ளே போன பிறகு தான் நம்பினேன். மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக தான் இவ்வாறு செய்கின்றார்கள்.
மேலும் பிக் பாஸ் போட்ட ரூல்ஸ் எனக்கு பிடிக்கவில்லை. நாமினேஷன் என்று எடுத்துட்டு வராங்க.. ஆனா எனக்கு சில கொள்கைகள் இருக்குது. எடுத்தவுடன் நாமினேசன் பண்ணுவதில் எனக்கு உடன்பாடு இல்லை.
புருஷன் பொண்டாட்டியா இருக்கிறவங்க ஒரு புரிதல் இல்லாம தான் டிவோசுக்கு போறாங்க.. எடுத்த உடன் குற்றவாளி ஆக்குவது சரியில்லை என்றார்.
Listen News!