• Jan 09 2026

எதிர்பாராமல் விழுந்த முதல் அடி! நடிகர் சூரியின் உணவகத்திற்கு வந்த சிக்கல்!

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல காமெடி நடிகர் சூரி தற்போது திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு சொந்தமான அம்மன் ஹோட்டலில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்படுவதாக கூறி சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அளித்துள்ளார். இந்த விடயம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


நடிகர் சூரி காமெடியனாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி படிப்படியாக வளர்ந்து தற்போது  விடுதலை, கருடன், கொட்டுகாளி போன்ற படங்களில் நடித்து ஹீரோவாகவும் ரசிகர்கள் மனதினை வென்றார். இந்நிலையில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் இவருக்கு சொந்தமான அம்மன் உணவகம் இயங்கி வருகிறது. அந்த உணவங்கத்தின் மீதே ஆர்வலர் ஒருவர் புகாரளித்துள்ளார்.


இது குறித்து ஊடகங்களுக்கு இவ்வாறு விளக்கம் அளித்தார் "இந்த உணவகத்தில் தயாரிக்கப்படும் உணவுகள் தரமற்ற முறையில் தயாரிக்கப்படுகிறது. அம்மன் உணவகத்தின் அருகே அமைந்துள்ள செப்டிக் டேங்குகளின் நடுவே காய்கறிகள் வெட்டுதல், உணவு சமைத்தல், உணவுப் பொருட்களை பாக்கெட் போட்டு பேக்கிங் செய்தல் போன்ற பணிகள் இரவு பகலாக நடந்து வருகிறது. ஆனால், எலி, கரப்பான் பூச்சிகள் வசிக்கும் இடமாக அந்த இடம் அமைந்துள்ளது. மேலும்  விதிமுறைகளை மீறி கூடுதலாக 350 சதுரடிக்கு நிரந்தரமாக ஷெட் அமைத்தும், 360 சதுர அடி திறந்தவெளியை ஆக்கிரமிப்பும் செய்துள்ளார்கள்" என்று சமூக ஆர்வலர் கூறியுள்ளார். இந்த விடயம் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுவையும் சமர்ப்பித்துள்ளார்.

Advertisement

Advertisement