• Jan 17 2025

சினிமாவிற்கு வந்து 8 வருடம் பூர்த்தி! நன்றி கூறி ராஷ்மிகா போட்ட ஸ்டோரி வைரல்!

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது அடுத்தடுத்து பிசியாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தனது இன்ஸ்ட்ராகிராம் ஸ்டோரியில் 8 வருடங்களாக தனக்கு சபோட்டிவாக இருந்த ரசிகர்களுக்கு நன்றி கூறி பதிவொன்றை போட்டுள்ளார். 


நடிகை ரஷ்மிகா சமீபத்தில் நடிகர் அல்லுஅர்ஜூனுடன் புஷ்பா-2 திரைப்படத்தில் நடித்து பிளாஷ் பஸ்ட்டர் ஹிட் கொடுத்திருப்பார். தொடர்ந்தும் பெரிய ஹீரோக்களுடன் நடித்தும் வருகிறார். இந்நிலையில் தான் சினிமாவிற்கு வந்து 8 வருடங்கள் கடந்து விட்டதாக கூறி பதிவொன்றை போட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது. 


அந்த பதிவில் "நான் சினிமாவிற்கு வந்து 8 வருடங்கள் ஆகிறது. இத்தனை வருடங்கள் திரையுலகில் இருந்து நான் இதுவரை செய்த அனைத்துக்கும் துணையாய் இருந்தது  உங்கள் அன்பும் ஆதரவும் மட்டுமே. இது வரையில் எனக்கு சபோட்டிவாக இருந்த உங்களுக்கு நன்றி" என பதிவிட்டுள்ளார். அத்துடன் சூரியன் உதயமாகும் புகைப்படத்தினையும் பகிர்ந்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement