• Jan 19 2025

முதல் முத்தம் அவரோடத்தான்... மகாநதி சீரியல் காவேரியை பற்றி தெரியுமா? தெரிந்துகொள்வோம் வாங்க...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ரொம்பவே சூப்பராக ஓடி கொண்டிருக்கும் சீரியல் தான் மகாநதி சீரியல் இந்த சீரியலில்  எல்லோருக்கும் ரொம்பவே பிடிச்ச கரெக்டரா வலம் வருபவர் தான் காவேரி. ஒரு பொண்ணு எதற்கும் பயப்பிடாமல் தைரியமாக   இப்பிடி தான் இருக்கனும் என்ற மாதிரி ரோல் மொடல்லான கரெக்டர் பண்ணிட்டு இருக்கிற காவேரியின் நிஜ  வாழ்க்கை வரலாற்ற தான் பார்க்க போகின்றோம்

 "1993 ஜூலை 18ம் திகதி தான் இவங்க பிறந்தாங்க. இவங்களுடைய இயற்பெயர் லட்சுமி பிரியா.  பிறந்தது , வளர்ந்து , படிப்பு எல்லாமே சென்னையில தான் . படிக்கும் போதே இவங்களுக்கு சினிமால ஆசை இருந்து இருக்கு . மகாநதி சீரியல்ல இவங்க அடக்க ஒடுக்கமா கலாச்சார பொண்ணாக இருந்தாலும் நிஜ வாழ்க்கையில ரொம்ப மாடலிங், மற்றும் ரொம்ப தைரியமா கெத்தா இருக்க கூடியவங்க . 

எப்பிடியாது சினிமாவுக்குள்ள போயிரனும் என்கின்ற ஆசை டீவியை பார்க்கும் போதெல்லாம் வந்திருக்கு . இவங்க குடும்பத்துக்கும் சினிமாக்கும் சரி வராத நிலையில் இருந்தாலும் எனக்கு பிடிச்சதை தான் செய்வேன். என்று வங்கியில வேலை பார்த்து கொண்டு மாடலிங் செய்ய ஆரம்பித்து இருக்காங்க . 


காலேஜ் படிக்கும் போது இவங்களுக்கு ஒரு லவ்வும் இருந்து இருக்கு அந்த பையனோட தான் இவங்கட முதலாவது முத்தமும் இருந்து இருக்கு என்று வெளிப்படையா ஒரு பேட்டியில சொல்லியிருந்தாங்க. சினிமாவுக்குள்ள போகனும் என்று ஆர்வம் இருந்த இவங்க டிக்டொக் , ரீல்ஸ் என்று இதனால பிரபலம் ஆகினால் பட வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்து இதை எல்லாம் முயற்சி செய்தாங்க , இருந்தாலும் இது எல்லாம் அவருக்கு சுத்தமா வரவில்லை என்று விட்டாங்க . 

இருந்தாலும் விடாமுயற்சி தான் விஷ்வரூப வெற்றி என்ற மாதிரி இவங்க முயற்சியால மிஸ் மிறாக்கல்  பட்டம் வென்றவங்க . அம்மா அப்பா அனுமதி இல்லாமலேயே மீடியாவுக்குள்ள வந்திட்டாங்க . சினிமாவுக்குள வந்த இவங்களுக்கு பட வாய்ப்பு கிடைத்தது . பன்னி குட்டி திரைப்படத்தில யோகிபாபு உடன் சேர்ந்து நடித்து இருந்தாங்க .


பத்துதல , எதிர்வினையாற்று போன்ற படங்களில் நடித்தாலும் இது எதுவுமே கொடுக்காத வெற்றியை மகாநதி சீரியல் கொடுத்து இருந்தது . இந் நிலையில் இவங்களும் இந்த சீரியல எல்லோருமே  விரும்ப கூடிய கதாபாத்திரமாக நடித்து கொண்டு இருக்கிறார் 

Advertisement

Advertisement